worldcup 2023 | india-vs-south-africa | virat-kohli: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தத் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றியைப் பெற்றது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Cricket World Cup: Mohammad Hafeez calls Virat Kohli selfish, Wahab Riaz disagrees
தனது 35வது பிறந்தநாளை நேற்று கொண்டாடிய விராட் கோலி இந்தப் போட்டியில் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 49 வது ஒருநாள் சதத்தை விளாசினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த அவர் 121 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 101 எடுத்தார். தனது 49வது சததத்தை விளாசியதன் மூலம் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கோலி சமன் செய்தார்.
இந்நிலையில், விராட் கோலி மெதுவாக பேட்டிங் செய்து தனது தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடுகிறார் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் விமர்சித்துள்ளார். அவரது கருத்து உடன்படாத பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ், 'அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் தனி பங்கு வரையறுக்கப்பட்டுள்ளது' என்று கூறினார்.
முகமது ஹபீஸ் விமர்சனம்
‘டாப் கிரிக்கெட் அனாலிசிஸ்’ நிகழ்ச்சியில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் பேசுகையில், “விராட் கோலியின் பேட்டிங்கில் நான் சுயநல உணர்வைக் கண்டேன். இந்த உலகக் கோப்பையில் இது மூன்றாவது முறையாக நடந்தது. 49 வது ஓவரில், அவர் தனது சொந்த சதத்தை எட்டுவதற்கு ஒரு சிங்கிள் எடுக்க விரும்பினார். மேலும் அவர் அணிக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை.
அணிக்காக தியாகம் செய்யும் ரோகித் சர்மாவை விராட் பார்க்க வேண்டும். ரோகித் சர்மாவும் சுயநல கிரிக்கெட்டை விளையாடியிருக்கலாம். ஆனால் அவர் விளையாடவில்லை,.ஏனெனில் அவர் டீம் இந்தியாவுக்காக விளையாடுகிறார், தனக்காக அல்ல.
அதனால் ரோகித் சர்மாவுக்குக் தான் வாழ்த்துச் சொல்ல வேண்டும். சரியான நோக்கத்துடன் அவர் தனது இன்னிங்ஸை தியாகம் செய்யும் விதம் பாராட்டுக்குரியது. முதல் ஆறு ஓவர்களில் அவர் பேட்டிங் செய்த விதம் அற்புதமாக இருந்த்ட்து. தென் ஆப்பிரிக்காவுக்கு அந்த எதிர்பாராத அடியைக் கொடுத்தார். ஆடுகளம் கடினமாக இருக்கும் என்றும், பந்து புதியதாகவும் கடினமாகவும் இருக்கும்போது தாக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். உங்கள் கேப்டனும் உங்களைப் போலவே விளையாட முடியும். ஆனால் அவரது தனிப்பட்ட சாதனையை விட அவரது இலக்கு பெரியது. ரோகித்தாலும் சதம் அடிக்க முடியும்.
விராட் நன்றாக விளையாடவில்லை என்று நான் சொல்லவில்லை. அவர் 97 ரன்களை எட்டும் வரை அழகாக பேட்டிங் செய்தார். கடைசியாக எடுத்த மூன்று சிங்கிள்ஸில் நான் அவரது நோக்கம் பற்றி பேசுகிறேன். அவர் பவுண்டரி அடிப்பதற்குப் பதிலாக ஒற்றை இலக்க ரன்களைத் தேடினார். அவர் 97 அல்லது 99 ரன்களில் வெளியேறினால் யார் கவலைப்படுகிறார்கள். அணி எப்போதும் தனிப்பட்ட மைல்கல்லை விட மேலே இருக்க வேண்டும்." என்று அவர் கூறினார்.
வஹாப் ரியாஸ் மாறுபட்ட கருத்து
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் பேசுகையில், “நான் அதற்கு உடன்படவில்லை. ரோல் வித்தியாசமாக வரையறுக்கப்படுகிறது. விளையாட்டை ஆழமாக எடுத்துச் செல்வது தான் விராட்டின் பங்கு. கடைசி 8 ஓவரில் இந்தியா 75 ரன்கள் எடுத்தது. சூர்யாவும் - ஜடேஜாவும் வேகமாக விளையாடினர். ஆனால், கோலி மறுமுனையில் இருப்பதை உறுதி செய்தார். கோலி அவுட்டாகியிருந்தால், அந்த இரண்டு கேமியோக்களை நாம் பார்த்திருக்க மாட்டோம். மேலும் இந்தியா 300 ரன்களைக் கடந்திருக்காது.
நாம் எந்தெந்த வீரருக்கு என்ன பங்கு என்பது பற்றி பேசுகிறோம். தொடக்க வீரர்களாக ரோகித்தும் சுப்மனும் அதிரடியாக விளையாடுகிறார்கள். பின்னர் விராட் ஷீட் ஆங்கர் ரோலில் விளையாடுகிறார். விளையாட்டை ஆழமாக எடுத்துக்கொள்கிறார். ரோகித்தும் சுப்மனும் முன்கூட்டியே வெளியேறினால், ஸ்ரேயாஸ் ஆக்ரோஷமாக இருப்பார். கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் பேட்டிங் செய்வார்கள். இது மிகவும் தெளிவாக உள்ளது. ஆம் கோலி மெதுவாக பேட்டிங் செய்தார். ஆனால் அவர் இல்லையென்றால் இந்தியா 326 ரன்களை குவித்திருக்காது." என்று அவர் கூறினார்.
வஹாப் ரியாஸுஸ் கருத்துக்கு உடன்பட்ட பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப், “அவரது பங்கு அங்கேயே இருக்க வேண்டும். அவர் எத்தனை பந்துகளை எதிர்கொண்டாலும் பரவாயில்லை. நீங்கள் பார்ட்னர்ஷிப்களைப் பார்க்கிறீர்கள். அவர் மெதுவாகத் தான் பேட்டிங் செய்தார். ஆனால் அது தான் அவருடைய பங்கு. மற்றவர்கள் அவரைச் சுற்றி பேட் செய்கிறார்கள்." என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.