Advertisment

முகமது ரிஸ்வான் நொண்டியபடி ஓடியது நடிப்பா பாஸ்? அவரே கொடுத்த ஷாக் பேட்டி

இலங்கைக்கு எதிரான போட்டிக்கு இடையில் தனக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டது உண்மைதான் என்றும், சில சமயங்களில் தான் நடித்ததாகவும் கூறி முகமது ரிஸ்வான் ஷாக் கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Mohammad Rizwan

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 48.2 ஓவரிலே இலக்கை எட்டிப்பிடித்த பாகிஸ்தான் இலங்கையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Pakistan Vs Srilanka | Worldcup 2023: 10 அணிகள் பங்கேற்றுள்ள 13வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று செவ்வாய்க்கிழமை ஐதராபாத்தில் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குசல் மெண்டிஸ் 122 ரன்களும், சமரவிக்ரம 108 ரன்களும் எடுத்தனர். 

Advertisment

தொடர்ந்து 345 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரரான அப்துல்லா ஷபீக் 113 ரன்கள் எடுத்தார். மிடில் ஆடரில் களமிறங்கிய முகமது ரிஸ்வான் காயம் ஏற்பட்ட போதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 131 ரன்கள் குவித்தார். 48.2 ஓவரிலே இலக்கை எட்டிப்பிடித்த பாகிஸ்தான் இலங்கையை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

முகமது ரிஸ்வான் பேட்டி

இந்நிலையில், இந்த போட்டிக்கு இடையில் தனக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டது உண்மைதான் என்றும், சில சமயங்களில் தான் நடித்ததாகவும் கூறி முகமது ரிஸ்வான் ஷாக் கொடுத்துள்ளார். இப்போட்டியில் அவர் சிக்ஸர் பறக்க விட்டபோது தசைப் பிடிப்பு ஏற்பட்டு தள்ளாடி கீழே விழுந்தார். ஆனால், பந்து சிக்சருக்கு பறந்தது. அந்த தசைப் பிடிப்புக்கு சிகிச்சை எடுத்துக்கொண்ட ரிஸ்வான் தொடர்ந்து அதிரடியாகவும் ஆடி வந்தார்.

சில நேரங்களில் நொண்டியபடி ஓடினார். அதிரடியாக விளையாடப் போய் மேலும் 2 முறை கீழே விழுந்தார். அத்துடன் 2 ரன்களுக்கும் ஓடினார். இத்துனை வலியுடன் ரிஸ்வான் அணிக்காக தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் என ரசிகர்கள் உணர்ச்சி வசப்பட்டனர். அவருக்கும் பாராட்டும் தெரிவித்தனர். இந்த நிலையில், ரிஸ்வான் தசைப் பிடிப்புக்கு மத்தியில் அவ்வப்போது நடித்ததாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

போட்டிக்குப் பிறகு அவரது தசைப்பிடிப்புகளைப் பற்றி கேட்கப்பட்டபோது, "ஆட்டத்தின் இடையில் எனக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டது உண்மைதான் அதேநேரம் சில சமயங்களில் நான் நடித்தேன்." என்று கூறி சிரித்தார். அவர் பேசிய வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Worldcup Pakistan Vs Srilanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment