இந்த தோரணை, கிராண்ட் ஸ்டாண்டில் இருந்து பார்க்கும் டேவிட் பெக்காமை பெருமைப்படுத்தியிருக்கும்.
மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து முதல் அரையிறுதி ஆட்டத்தில், முகமது ஷமியின் அற்புதமான பவுலிங்கால் இந்திய அணி மீண்டும் ஒருமுறை மீண்டு வந்தது.
வில்லியம்ஸன் விக்கெட்டை வீழ்த்தி, ஷமி உலகக் கோப்பையில் 50-வது விக்கெட்டை எட்டி சாதனை படைத்தார். அடுத்து களமிறங்கிய டாம் லாதம் வந்தவேகத்தில் ஷமி பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி டக்அவுட்டில் பெவிலியன் திரும்பினார்.
இந்த விக்கெட், பதட்டத்தால் பிடிபட்ட மைதானத்தை மீண்டும் உயிர்ப்பித்தது, நியூசிலாந்து நம்பிக்கையையும் முடிவுக்குக் கொண்டு வந்தது, மேலும் உலகக் கோப்பையின் அரையிறுதியில் இந்தியாவை 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தது.
இந்திய அணி இப்போது, ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில்- ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது அரையிறுதியில் வெற்றி பெறும் அணியை எதிர்கொள்வார்கள்.
இருப்பினும், ஷமியும் அவரது அணியினரும் மும்பையில் நடக்கும் இறுதிப் போட்டியில் அணியில் இருப்பார்களா என்று உறுதியாகத் தெரியாத ஒரு தருணம் ஆட்டத்தில் இருந்தது.
மைதானத்தில் இருந்த 30,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களைப் போலவே, ஷமியும் தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக் கோப்பையின் அரையிறுதி கட்டத்தில் இந்தியா வெளியேறுமா என்று பயப்படத் தொடங்கினார்.
’கடந்த இரண்டு உலகக் கோப்பைகளிலும் நாங்கள் அரையிறுதியில் தோற்றோம். நமக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று யாருக்குத் தெரியும்? எனவே, இதற்காக நாங்கள் எல்லாவற்றையும் செய்ய விரும்பினோம், ஒரு வாய்ப்பை கூட நாங்கள் விட்டுவிட விரும்பவில்லை’, என்று ஷமி கூறினார்.
ஷமி வீசிய 33வது ஓவரில் ஒரு ரன் அடித்து, மிட்ஷெல் 85 பந்துகளில் சதம் அடித்தார். அடுத்த பந்தில் குல்தீப் யாதவிடம் கேட்ச் கொடுத்து வில்லியம்ஸன் 69 ரன்கள் ஆட்டமிழந்தார். இருவரும் 3 வது விக்கெட்டுக்கு 181 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்து களமிறங்கிய டாம் லாதம் வந்தவேகத்தில் ஷமி பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி டக்அவுட்டில் பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து தடுமாறியது.
5-வது விக்கெட்டுக்கு வந்த பிலிப்ஸ், மிட்ஷெலுடன் சேர்ந்தார். ஜடேஜா, ஷமி இருவரும் லைன் லென்த்தில் பந்துவீசி ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தி நெருக்கடி அளித்தனர்.
ஆனால், 35 ஓவர்களுக்கு மேல் மீண்டும் அதிரடியில் மிட்ஷெல் இறங்கினார்.
40ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு சவாலாக இருந்தது. 60 பந்துகளில் நியூசிலாந்து வெற்றிக்கு 132 ரன்கள் தேவைப்பட்டது.
மிட்செல் மற்றும் வில்லியம்சன் கூட்டத்தை திகைக்க வைத்தனர். கைவிடப்பட்ட கேட்சுகளும், தவறவிட்ட ரன் அவுட்களும் விரக்தியை அதிகப்படுத்தியது.
’அந்த நேரத்தில், நாங்கள் அமைதியாக இருப்பது முக்கியம், கூட்டம் அமைதியாக இருந்தது, ஆனால் எங்களுக்கு ஒரு கேட்ச் அல்லது ரன் அவுட் தேவை என்று எங்களுக்குத் தெரியும்’, என்று ரோஹித் பின்னர் கூறினார்
ஷமியின் கையில் பந்து இருந்ததால், ஒரு நம்பிக்கை இருந்தது.
49-வது ஓவரை ஷமி வீசினார். 2வது பந்தில் விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து சவுதி 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.
முகமது ஷமி' கோஷங்கள் மைதானத்திற்குள் எதிரொலிக்க, உலகக் கோப்பையின் இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளர் ஷமி, இறுதி அடியை வழங்கினார்.
அடுத்துவந்த பெர்குஷனும் ஒரு சிக்ஸர் அடித்தநிலையில் அடுத்தபந்தில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
48.5 ஓவர்களில் நியூசிலாந்து அணி ஆல் அவுட் ஆகிப் போனது. இதனால் 70 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
கோலி, ரோகித், ஷமி ஆகியோர் படைத்த சாதனைகளால் இந்தப் போட்டி இந்தியாவை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற ஆட்டமாக மட்டுமின்றி, வரலாற்றில் இடம்பிடித்த ஆட்டமாகவும் மாறிப் போனது.
வில்லியம்ஸன் விக்கெட்டை வீழ்த்தி, ஷமி உலகக் கோப்பையில் 50-வது விக்கெட்டை எட்டி சாதனை படைத்தார். உலகக்கோப்பையில் தனது 17-வது போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.
இதன் மூலம் குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுகளை எட்டிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஷமி படைத்துள்ளார்.
Read in English: Sultan of swing Mohammad Shami bends it like David Beckham, helps India take U-turn
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.