scorecardresearch

பாராட்டும் ரசிகர்கள்; விட்டு விளாசும் மனைவி – முகமது ஷமியின் ‘ஓ மை கடவுளே’ மொமண்ட்

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி உத்தரபிரதேசத்தில் பேருந்துகள் மற்றும் சாலை வழியாக வீட்டிற்குச் செல்வோருக்கு உணவுப் பொட்டலங்களையும் மாஸ்க்குகளையும் விநியோகம் செய்தது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், முகமது ஷமி பேருந்தில் காத்திருப்பவர்களுக்கு தண்ணீர் விநியோகிப்பதைக் காண முடிந்தது. சுமார் 200 பேருக்கு உணவு மற்றும் வாழைப்பழங்களை விநியோகித்த அவர், உணவு மற்றும் தண்ணீரை விநியோகிக்க உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா அருகே நெடுஞ்சாலையில் கூடாரங்களை வைக்க உதவினார். As #IndiaFightsCorona, @MdShami11 comes forward […]

mohammad shami, shami, shami corona, mohammad shami migrants, முகமது ஷமி, விளையாட்டு செய்திகள், coronavirus, pandemic, global pandemic, covid-19, cricketers corona
mohammad shami, shami, shami corona, mohammad shami migrants, முகமது ஷமி, விளையாட்டு செய்திகள், coronavirus, pandemic, global pandemic, covid-19, cricketers corona
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி உத்தரபிரதேசத்தில் பேருந்துகள் மற்றும் சாலை வழியாக வீட்டிற்குச் செல்வோருக்கு உணவுப் பொட்டலங்களையும் மாஸ்க்குகளையும் விநியோகம் செய்தது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

இதுகுறித்து வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், முகமது ஷமி பேருந்தில் காத்திருப்பவர்களுக்கு தண்ணீர் விநியோகிப்பதைக் காண முடிந்தது. சுமார் 200 பேருக்கு உணவு மற்றும் வாழைப்பழங்களை விநியோகித்த அவர், உணவு மற்றும் தண்ணீரை விநியோகிக்க உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா அருகே நெடுஞ்சாலையில் கூடாரங்களை வைக்க உதவினார்.


ஒரு வீடியோவைப் பகிர்ந்த பிசிசிஐ, :இந்தியா கொரோனாவை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் சூழலில், முகமது ஷமி முன்வந்து உத்தரபிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலை எண் 24 இல் உணவு பாக்கெட்டுகள் மற்றும் மாஸ்க்குகளை விநியோகிப்பதன் மூலம் வீட்டிற்குச் செல்ல முயற்சிக்கும் மக்களுக்கு இது பெரும் உதவியாக அமைகிறது. சஹாஸ்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே உணவு விநியோக மையங்களையும் அமைத்துள்ளார். நாம் ஒன்றாக இருக்கிறோம்” என்று பாராட்டியுள்ளது.

கிரிக்கெட்டை ஓவர்டேக் செய்த ஹாக்கி – தனி நபர் இடைவெளியுடன் தொடங்கிய பயிற்சி

ஒருபக்கம் இங்கு ரசிகர்கள் ஷமியை பாராட்டிக் கொண்டிருக்க, மறுபக்கம் ஷமியின் மனைவி அவரை விளாசிக் கொண்டிருக்கிறார்.

முகமது ஷமி மற்றும் அவரது மனைவி ஹசின் ஜஹான் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து உள்ளனர். முகமது ஷமி மீது ஹசின் ஜஹான் பாலியல் குற்றச்சாட்டு மற்றும் அவர் சூதாட்டாத்தில் ஈடுபட்டார் என்று பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளார்.

இதையடுத்து பிசிசிஐ முகமது ஷமியிடம் நடத்திய விசாரணைக்கு பின்னர் அவர் மீது எந்த குற்றமும் இல்லை என்று அறிவித்தது. முகமது ஷமி – ஹசின் ஜஹான் இருவரும் மாறி மாறி அளித்த புகாரின் அடிப்படையில் இவர்களது வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

இதனிடையே ஹசின் ஜஹான் மீண்டும் மாடலிங் துறைக்கு திரும்பி உள்ளார். ஷமி உடனான திருமண வாழ்க்கைக்கு பின்னர் மீண்டும் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

ஹசின் சமூக வலைதளங்களில் பகிரும் புகைப்படங்களை பலரும் விமர்சித்து வருகின்றனர். இதனை சற்றும் கண்டு கொள்ளாத அவர் தொடர்ந்து அதுபோன்ற புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

தற்போது ஷமி உடன் எடுத்த பழைய புகைப்படத்தை இன்ஷ்டாகிராமில் பதிவிட்டு, நீங்கள் ஒன்றுமில்லாத போது நான் தூய்மையாகவும், மதிப்புடையவராக இருந்தேன். தற்போது நீங்கள் ஒரு நிலையில் உள்ளதால் நான் தூய்மையற்றவள். உண்மையை என்றும் மறைக்க முடியாது. முதலை கண்ணீர் நீண்ட நாள் பலிக்காது“ என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Mohammad shami distributes food masks to migrants bcci shami wife hasin jahan