தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி, கிரிக்கெட் வீரர் ஷமிக்கு அர்ஜுனா விருது: முழு பட்டியல் பாருங்க!

விளையாட்டு துறையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது உரிய விருதான அர்ஜுனா விருதை இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பெற உள்ளார்.

விளையாட்டு துறையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது உரிய விருதான அர்ஜுனா விருதை இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பெற உள்ளார்.

author-image
WebDesk
New Update
 Mohammed Shami and 25 others to receive Arjuna Award for 2023 full list in tamil

கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

Arjuna-awards | mohammed-shami | vaishali-r:இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் வலம் வருபவர் முகமது ஷமி. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான இவர் இந்திய அணிக்காக கடந்த 2013ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகமானார். 

Advertisment

இதுவரை 101 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஷமி 195 விக்கெட்டுகளையும், 64 டெஸ்ட் போட்டிகளில் 229 விக்கெட்டுகளையும், 24 டி20 போட்டிகளில் 23 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். 2013 முதல் ஐ.பி.எல் டி20 தொடரில் விளையாடி வரும் இவர் 127 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.  

ஷமி அண்மையில் இந்திய மண்ணில் நடைப்பெற்ற  உலகக்கோப்பை தொடரில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார். அத்துடன் பல்வேறு சாதனைகளை உலக கிரிக்கெட் அரங்கில் படைத்துள்ளார். இந்த ஆண்டு மூன்று வடிவங்களிலும் ஐ.சி.சி-யின் நம்பர் 1 அணியாக இந்தியா இருந்து வருவதில் ஷமி முக்கிய பங்கு வகித்தும் வருகிறார். 

ஷமி-க்கு அர்ஜுனா விருது

இந்நிலையில், விளையாட்டு துறையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது உரிய விருதான அர்ஜுனா விருதை முகமது ஷமி பெற உள்ளார். உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடியதையடுத்து, நடப்பு ஆண்டு அர்ஜுனா விருதுக்கான வீரர், வீராங்கனை பட்டியலில் முகமது ஷமியின் பெயரை தேர்வுக்குழு பரிந்துரை செய்து இருந்தது. 

Advertisment
Advertisements

இந்த நிலையில், முகமது ஷமி 2023ம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதை பெற இருக்கிறார். இந்த ஆண்டு அர்ஜுனா விருது பெறும் 26 விளையாட்டு வீரர்களில் ஒரே கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஆவார்.

வைஷாலி-க்கு அர்ஜுனா விருது

இதனிடையே, 2023 ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதை இன்னும் 25 விளையாட்டு வீரர்களும் தங்கள் வீரத்திற்காக பெற உள்ளனர். இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் ஜோடிகளான சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டிக்கு இந்தியாவின் உயரிய விளையாட்டு கௌரவமான மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 


2023 ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதை பெறும் வீரர், வீராங்கனைகள் பட்டியல்:

1. ஓஜஸ் பிரவின் தியோடலே (வில்வித்தை)
2. அதிதி கோபிசந்த் சுவாமி (வில்வித்தை)
3. ஸ்ரீசங்கர் எம் (தடகளம்)
4. பருல் சவுத்ரி (தடகளம்)
5. முகமது ஹுசாமுதீன் (குத்துச்சண்டை)
6. ஆர் வைஷாலி (சதுரங்கம்)
7. முகமது ஷமி (கிரிக்கெட்)
8. அனுஷ் அகர்வாலா (குதிரையேற்றம்)
9. திவ்யகிருதி சிங் (குதிரைச்சவாரி ஆடை)
10. திக்ஷா தாகர் (கோல்ப்)
11. கிரிஷன் பகதூர் பதக் (ஹாக்கி)
12. புக்ரம்பம் சுசீலா சானு (ஹாக்கி)
13. பவன் குமார் (கபடி)
14. ரிது நேகி (கபடி)
15. நஸ்ரீன் (கோ-கோ)
16. பிங்கி (புல்வெளி கிண்ணங்கள்)
17. ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (தூப்பாக்கி சுடுதல்)
18. இஷா சிங் (தூப்பாக்கி சுடுதல்)
19. ஹரிந்தர் பால் சிங் சந்து (ஸ்குவாஷ்)
20. அய்ஹிகா முகர்ஜி (டேபிள் டென்னிஸ்)
21. சுனில் குமார் (மல்யுத்தம்)
22. ஆன்டிம் (மல்யுத்தம்)
23. நௌரெம் ரோஷிபினா தேவி (வுஷு)
24. ஷீத்தல் தேவி (பாரா வில்வித்தை)
25. இல்லூரி அஜய் குமார் ரெட்டி (பார்வையற்ற கிரிக்கெட்)
26. பிராச்சி யாதவ் (பாரா கேனோயிங்)

அர்ஜுனா விருதை வருகிற ஜனவரி 9ஆம் தேதி குடியரசுத் தலைவர் வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Mohammed Shami Arjuna Awards Vaishali R

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: