இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்து வருபவர் முகமது ஷமி. இவர் ஹசின் ஜஹான் என்பவரை கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்து, கடந்த 2014 விவாகரத்து செய்தார். தற்போது இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகின.
இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா கடந்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கை காதலித்து கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்குள்ளும் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் விவாகரத்து செய்வதாக சானியா மிர்சா அறிவித்தார்.
இந்த சூழலில் தான், சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி ஆகிய இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக செய்திகள் வெளிவந்தன. அவர்கள் திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படங்களும் வைரலாக்கப்பட்டன. இதையடுத்து, ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஆனால், சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டதாக வெளிவரும் செய்திகள் முற்றிலும் வதந்தி என்று சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் தெரிவித்தார். மேலும் சானியா மிர்சா மற்றும் முகமது ஷமி திருமணம் தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில், சானியா மிர்சாவுடன் திருமணம் என வதந்தியை பரப்பியவர்களை கடுமையாக சாடியுள்ளார் முகமது ஷமி. 'சரிபார்க்கப்பட்ட சமூக வலைதள பக்கத்திலிருந்து இவை அனைத்தையும் சொல்ல உங்களுக்கு தைரியம் இருந்தால், நான் பதிலளிப்பேன்' என்று கூறியுள்ள ஷமி சமூக வலைதளத்தில் அதிகமான பொய்களைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், இதுபோன்ற மீம்கள் பொழுதுபோக்கை அளிக்கக்கூடும், அவை சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் யூடியூப்பில் சுபங்கர் மிஸ்ராவுடன் நடந்த உரையாடலில், முகமது ஷமியிடம் சானியா மிர்சாவுடன் திருமணம் என பகிரப்பட்ட வதந்திகள் பற்றி கேட்கப்பட்டது. இதற்கு அவர் பதிலளிக்கையில், “சமூக வலைதளங்களில் பொறுப்புடன் நடந்துகொள்ளவும், இதுபோன்ற ஆதாரமற்ற செய்திகளைப் பரப்புவதைத் தவிர்க்கவும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
இது வித்தியாசமாக இருக்கிறது. வேடிக்கைக்காக வேண்டுமென்றே செய்யப்படுகிறது. ஆனால் என்ன செய்ய முடியும்? நான் போனை திறந்தால் அந்த மீம்ஸ்களை பார்க்க முடிந்தது. ஆனால் மீம்ஸ்கள் வேடிக்கைக்காக உருவாக்கப்பட்டவை என்று மட்டுமே நான் கூற விரும்புகிறேன். ஆனால் அவை ஒருவரது வாழ்க்கையுடன் தொடர்புடையதாக இருந்தால், நீங்கள் அதைப் பற்றி சிந்தித்துப் பிறகு அதைப் பகிர வேண்டும். இந்த நபர்கள் சரிபார்க்கப்படாத சமூக வலைதள பக்கங்களில் இருந்து பகிர்ந்து, எதையும் மற்றும் எல்லாவற்றையும் சொல்லி தப்பிக்கிறார்கள்
ஆனால், நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன், இவை அனைத்தையும் சரிபார்க்கப்பட்ட சமூக பக்கத்திலிருந்து சொல்ல உங்களுக்கு தைரியம் இருந்தால், நான் அதற்கு பதிலளிப்பேன். வெற்றியை அடைய முயற்சி செய்யுங்கள், மக்களுக்கு உதவுங்கள் மற்றும் உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்ளுங்கள். அப்போது நீங்கள் ஒரு நல்ல மனிதர் என்று நான் நம்புகிறேன்." என்று அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“