Sriram Veera
கடந்த ஆண்டு, இந்தியாவின் பந்துவீச்சு பயிற்சியாளரான பாரத் அருண், பந்தைக் கொண்டு பல வேரியேஷன்கள் செய்வதில் முகமது ஷமியின் வியக்க வைக்கும் திறனைப் பற்றி பேசினார். பந்தைத் திருப்புவதிலும், ‘கனமான’ ரெட் பந்தில் அட்டாக்கிங் பவுன்ஸ் வீசுவதையும், அசுர வேகத்தால் பேட்டை கடுமையாக தாக்குவது குறித்தும் பேசியிருந்தார். வழக்கமாக, தேவைப்படும் இரு வெவ்வேறு திறன்கள் ஒரே பந்து வீச்சாளரால் செய்ய முடிவதில்லை. அருணின் கோட்பாடு படி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி நாளில், தனது பந்தை திருப்பும் திறனால், தென்னாப்பிரிக்காவை காலி செய்திருக்கிறார் ஷமி.
“இது ஒரு இயல்பான திறமை, நிச்சயமாக பந்தை ரிலீஸ் செய்வதை பொறுத்தது. ஆனால் ஷமி அதனுடன் இரண்டு காரியங்களைச் செய்கிறார். டிராக்கின் குறுக்கே பந்து செல்லும் நிலைத் தன்மையை கவனிக்கிறார். பிறகு, பேட்-அகல இயக்கத்தை பொறுத்து அவர் வீசும் பந்து, ஒன்று பேட்டை தாக்குகிறது, இல்லையெனில், Pad அல்லது ஸ்டம்ப்பை தாக்குகிறது. பயனுள்ள சூழ்நிலைகளில், அவர் பந்தை இன்னும் அதிகமாக திருப்புகிறார். ஆனால், சில சமயம் அவர் குறைவாகவே டர்ன் செய்கிறார். இது டிவியில் பார்க்க நன்றாக இருக்கும். ஆனால், உங்களுக்கு விக்கெட்டுகளைப் பெற்றுத் தராது” என்று பாரத் அருண் கூறியிருந்தார்.
அவர் பந்தை அவ்வளவு அதிகமாக திருப்ப முயற்சிக்கவில்லை. பக்காவான சீம் அளவிலேயே பந்து வீசுவதில் கவனம் செலுத்துகிறார். ஆனால், இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், அந்த மென்மையான ஆக்ஷன் மற்றும் பந்தை அவர் வெளியிடும் திறன் அவருக்கு இயற்கையாகவே வருகிறது. இதனால், அவர் மற்றவர்களை விட அதிகமாக ஸ்டம்புகளைத் தாக்குகிறார்.
அல்லது, வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பந்து என்ன செய்ய வேண்டும், அதை எப்படி செய்வது என்று அவருக்குத் தெரியும். பந்து ஸ்டம்புகளை நோக்கிச் செல்ல அவர் விரும்பும்போது, அவர் அதிகப்படியாக எதையும் முயற்சிக்க மாட்டார். பந்தை திருப்ப மாட்டார். திரும்பத் திரும்ப மென்மையான போக்கில் ஸ்விங் செய்து கொண்டே இருப்பார்.
டெம்பா பவுமா, ஃபாப் டு பிளெசிஸ் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் அவரது ஐந்து விக்கெட்டுகளில் மூன்று. அவர்கள் அனைவரும் பந்து வீச்சாளரின் திருப்பும் சாதுர்யம் மற்றும் அவர்களின் சொந்த தவறுகளால் ஆட்டம் இழந்தனர். பவுமாவின் விளையாட்டு பேக் ஃபூட் பாணியாகும். லென்த் பந்துகளுக்கு கூட முன்னே வந்து ஆட மாட்டார். இந்த கண்டிஷனில் இது ஆபத்தானது. அவர் கிரீஸிலேயே விளையாடி முடித்துவிடுகிறார்.
டு பிளெசிஸைப் பொறுத்தவரை, அவர் அவுட் சைட் ஆஃப் பந்துகளை தனது தோள்களை தூக்கி தவிர்த்து, ஒரு இந்தியரிடம் அவுட்டாவது இது முதல் முறை அல்ல. தென்னாப்பிரிக்காவில் கூட, அவர் இதே தவறுகளைத் தான் செய்தார்.
கடைசி இன்னிங்ஸில் சதம் அடித்த டி காக், உறைந்தே போய்விட்டார். ஷமியின் பந்தில் ஒரு சோம்பேறித் தனமான தற்காப்பு ஷாட்டை ஆட, பந்து நேராக ஆஃப் ஸ்டம்பைத் தட்டிச் சென்றது.
தென்னாப்பிரிக்காவின் நீண்ட முதல் இன்னிங்சின் போது, ஷமி கிட்டத்தட்ட ஒரு மென்மையான போக்கில் இருப்பது போல் தோன்றியது. ஷமியை விட, சுனில் கவாஸ்கரின் விருப்பமான ‘ஆற்றலை சேமியுங்கள்’ என்ற கோரிக்கையை யாரும் சிறப்பாக செய்யவில்லை. சேமிக்கப்பட்ட அந்த ஆற்றலை, கவாஸ்கர் களத்தில் அல்லது பேட்டிங் செய்யும் போது வெளிபடுத்தக் கோரினார். ஆனால் ஷமி பந்துவீச்சில் அதைச் செய்துவிட்டார். அவர் தனக்குள்ளேயே நன்றாக பந்து வீச முடியும் என்று எண்ணி, அமைதித் தன்மையை வெளிப்படுத்துகிறார். ஆனால், பந்துவீசும் போது தனது ஆவேசத்தை காட்டுகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் ஜேசன் கில்லெஸ்பி அல்ல, ஒவ்வொரு பந்திலும், ஒவ்வொரு முறை பந்து வீசும்போதும் அதன் தீவிரம் அச்சுறுத்தலாக இருப்பதற்கு. ஆனால், ஷமி அதன் ஆன் மற்றும் ஆஃப் மோடில் இருக்கிறார். சில நேரங்களில் அவரது மனநிலையைப் பொருத்தும், சில சமயங்களில் சூழலைப் பொருத்தும் அவர் பந்து வீசுகிறார்.
இது வழக்கமாக டெஸ்டில் நடப்பது தான். அவரது ஐந்து விக்கெட்டுகள் எதிரணியின் இரண்டாவது இன்னிங்ஸில் வந்ததில் ஆச்சரியமில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் 22.58 சராசரியுடன் 80 விக்கெட்டுகளை ஷமி பெற்றுள்ளார்; முதல் இன்னிங்சில் 34.47 ஆவரேஜுடன் 78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மேம்பட்ட உடற்தகுதி என்பது ஷமிக்கு நிச்சயமாக உதவியது. 2015 ஆம் ஆண்டில் ஒரு கட்டத்தில், அவர் 93 கிலோ எடையைக் கொண்டிருந்தார், ஆனால் இப்போது அவரது எடை 75.
ஆட்டத்தின் முடிவில், ஷமி போன்றவர்கள் பணிச்சுமையை எவ்வாறு தீர்மானிக்கிறார்கள் என்பது பற்றி கோலி பேசுகையில், “அவரது (ஷமியின்) ஐந்து விக்கெட்டுகளை நீங்கள் பார்த்தால், அணிக்குத் தேவைப்படும்போது வருகிறது. அதாவது, இரண்டாவது இன்னிங்ஸில் வருகிறது. அவர் அதை நன்றாக மாற்றியமைக்கிறார், அதுவே அவரது பலம். இப்போது தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் அவர் எங்களுக்கு ஸ்ட்ரைக் பந்து வீச்சாளராக இருந்து வருகிறார். ”
முகமது ஷமி 1996 முதல், 4 வது டெஸ்ட் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகள் எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.
டேன் பீட் மற்றும் செனுரான் முத்துசாமி இடையேயான ஒன்பதாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பை முறியடிக்க கோஹ்லி சற்று முன்னதாக ஷமியை கொண்டு வந்திருக்கலாம். ஆனால் மதிய உணவுக்கு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவரை அழைத்து வந்தார். கடைசி இரண்டு விக்கெட்டுகளை அகற்ற அவருக்கு மூன்று ஓவர்களே தேவைப்பட்டன.
‘சூடான இந்திய சூழலில் வேகமாக பந்து வீசு, இயல்பான ஆற்றலைவிட விட அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. இதனால், நான் இந்தியாவில் விளையாட போராடுகிறேன்’ என ஆஸி., பந்துவீச்சாளர் மைக்கேல் காஸ்ப்ரோவிச் ஒருமுறை தெரிவிக்க, அவருக்கு ஸ்ரீநாத் இப்படியொரு ஆலோசனையை வழங்கினார்.
“நீங்கள் அதிகமாக தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பதை நான் கவனிக்கிறேன். நிறைய தண்ணீர் குடியுங்கள். அதில், சிலவற்றைப் குடித்துவிடுங்கள், சிலவற்றை வெளியே துப்பி விடுங்கள்,” என்றார்.
இந்த பார்முலாவை செயல்படுத்திய பிறகு பேசிய காஸ்ப்ரோவிச், “சூடான கிளைமேட்டில், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தேன், இப்போது ஸ்ரீநாத்தின் ஐடியா எனக்கு வேலை செய்தது”. என்றார்.
ஷமி தண்ணீரை விழுங்குகிறாரா அல்லது துப்புகிறாரா என்பது நமக்கு தெரியாது. ஆனால் அவர் ஆற்றல் பாதுகாப்பில் எவ்வளவு விழிப்புடன் இருந்தார் என்பது, அவரது பந்துவீச்சில் நமக்கு தெரிந்தது. இந்த டெஸ்டில், ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது குறித்து இந்தியா அதிகம் கவலைப்பட வேண்டாம். ஏனெனில், ஷமி நம்மோடு இருக்கிறார்.