Mohammed Shami | Hardik Pandya: 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தாண்டு (2024) நடைபெறுகிறது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலம் கடந்த டிச.19ம் தேதி துபாயில் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு முன்னதாக, குஜராத் டைட்டன்ஸ் (ஜி.டி) அணியில் இருந்து விலகிய ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் (எம்.ஐ) அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ஹர்திக் பாண்டியாவின் திடீர் முடிவு ஐ.பி.எல். கிரிக்கெட் வட்டாரத்தில் அலைகளை உருவாக்கியது. ரசிகர்கள் மற்றும் நிபுணர்கள் இருவரும் இது குறித்து கலவையான எதிர்வினைகளைக் கொண்டிருந்தனர். இந்நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகியது குறித்து வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
ஷமி பதில்
இதுதொடர்பாக ஷமி சமீபத்திய பேட்டியில், "பாருங்க, யார் அணியை விட்டு வெளியேறுகிறார்கள் என்பது இங்கு முக்கியமல்ல. அணியின் சமநிலையை நீங்கள் பார்க்க வேண்டும். ஹர்திக் இங்கு இருந்தார், அவர் எங்களுக்கு நன்றாக கேப்டனாக இருந்தார். இரண்டு சீசன்களிலும் அவர் எங்களை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். அதில் நாங்கள் ஒரு முறை வென்றோம். ஆனால் குஜராத் ஹர்திக்கை வாழ்நாள் முழுவதும் ஒப்பந்தம் செய்யவில்லை. இங்கு தொடர்வதும் அல்லது வெளியேறுவதும் அவரது முடிவு. சுப்மன் இப்போது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார், அவரும் அனுபவத்தையும் பெறுவார். ஒரு நாள் அவரும் கிளம்பலாம். மேலும் இது விளையாட்டின் ஒரு பகுதி, வீரர்கள் இங்கு வாருவார்கள், செல்வார்கள்.
நீங்கள் கேப்டனாகும்போது, உங்கள் செயல்திறனைக் கவனித்துக் கொண்டே பொறுப்பைக் கையாள்வது முக்கியம். மேலும் அந்த பொறுப்பு இந்த முறை சுப்மனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் மனதில் சில சுமை இருக்கலாம். ஆனால் வீரர்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கிறார்கள். அதனால் அவர் கவலைப்படத் தேவையில்லை. நீங்கள் வீரர்களை நன்றாக நிர்வகிக்க வேண்டும் மற்றும் உங்கள் வீரர்களிடமிருந்து சிறந்தவற்றைப் பிரித்தெடுக்க வேண்டும்." என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“