இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வரவிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் கலந்து கொண்டு விளையாடுகிறது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் அரங்கேறுகிறது.
இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இடம் பெறவுள்ளார். ஷமி கடைசியாக 2023 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடினார். அதன் பிறகு அறுவை சிகிச்சை செய்து கொண்டாலும், கணுக்கால் காயம் காரணமாக அவர் ஓரங்கட்டப்பட்டார்.
34 வயதான அவர் ரஞ்சி டிராபிக்கான கிரிக்கெட்டுக்கு திரும்பினார் மற்றும் டி20 சையத் முஷ்டாக் அலி டிராபியிலும் விளையாடினார். மேலும் விஜய் ஹசாரே 50 ஓவர் டிராபியில் விளையாடி வருகிறார். இருப்பினும், முழங்கால் வீக்கம் காரணமாக, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் அவரால் இடம் பெற முடியவில்லை.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
ஃபார்மில் உள்ள சஞ்சு சாம்சன் முதல் தேர்வாக இருப்பதால், ரிஷப் பண்ட் தனக்கான இடத்தைத் தவறவிட்டுள்ளார். துருவ் ஜூரெலை அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பராக தேர்வாளர்கள் தேர்வு செய்துள்ளனர். ஜிதேஷ் ஷர்மாவுக்கு பதிலாக ஜூரல் வந்துள்ளார். ஆஸ்திரேலிய டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் இடம் பிடித்த ரமன்தீப் சிங்கிற்கு பதிலாக ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டியும் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றொரு ஆல்ரவுண்டர் சிவம் துபே அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரியான் பராக் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.
இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, நிதிஷ் ரெட்டி, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, துருவ் ஜூரல், ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர்.
A look at the Suryakumar Yadav-led squad for the T20I series against England 🙌#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/nrEs1uWRos
— BCCI (@BCCI) January 11, 2025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.