/tamil-ie/media/media_files/uploads/2022/11/Shoib-Akhtar-Mohammed-Shami.jpg)
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததையடுத்து, மனம் உடைந்த சோயிப் அக்தர், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இதுதான் கர்மா என்று பதிலடி கொடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு, இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஷோயப் அக்தரின் ட்வீட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார். பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி வெற்றி பெற முடியாமல் போனதால் இதயம் நொறுங்கியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் கூறினார்.
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது
மெல்போர்னில் பாகிஸ்தானின் தோல்விக்கு பிறகு தனது இதயம் நொறுங்கியதாக சோயிப் அக்தரின் ட்வீட்டிற்கு முகமது ஷமி பதிலளித்துள்ளார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, டி20 உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததால் இதயம் நொறுங்கியதாக ட்வீட் செய்த பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரை சமூக ஊடகங்களில் விமர்சித்தார். 19 ஓவர்களில் 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
ட்விட்டரில் சோயிப் அக்தரின் பதிவுக்கு பதிலளித்த முகமது ஷமி ‘இதுதான் கர்மா’ என்று பதிவிட்டுள்ளார். முகமது ஷமியின் இந்த பதில் குறித்த சூழலை பலரால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், டி20 உலகக் கோப்பை 2022 அணிக்கு ஷமியின் தேர்வை அக்தர் கேள்வி எழுப்பிய த்ரோபேக் வீடியோவை சிலர் சுட்டிக்காட்டினர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.