பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானா காரில் சிக்கிய ஒருவரை காப்பற்றியுள்ளார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. மேலும், ‘ஒருவரை காப்பாற்றியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. உலகக் கோப்பை தொடரில் 6 போட்டிகளில் விளையாடிய முகமது ஷமி 23 விக்கெட்டுகள் கைப்பற்றி பல சாதனைகள் படைத்தார். சொந்த ஊருக்கு சென்ற முகமது ஷமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், தான் உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதிக்கு காரில் பயணம் செய்துள்ளார். அது ஒரு மலைப்பிரதேச பகுதி. அப்போது, முகமது ஷமி காருக்கு முன் சென்று கொண்டிருந்த காரானது சாலையின் ஓரத்தில் இருந்த பெரிய பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இதைப் பார்த்த ஷமி உடனே தனது காரை நிறுத்தி விட்டு ஓடிச் சென்று, அந்த காரில் ஒருவரை காப்பாற்றியுள்ளார். ஏர் பிரேக்கைப் பயன்படுத்தியதால், அந்த காரில் இருந்த நபருக்கு பெரிதாக காயம் ஒன்றும் ஏற்படவில்லை.
விபத்தில் சிக்கிய காரில் இருந்தவரை வெளியில் வர உதவி செய்த ஷமி, அவருக்கு காயம் ஏதும் ஏற்பட்டிருக்கிறதோ என்று பார்த்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து ஷமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஒருவரை காப்பாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவர் மிகவும் அதிர்ஷ்டசாலி. கடவுள் அவருக்கு 2வது வாழ்க்கை அளித்துள்ளார். அவரது கார் நைனிடால் அருகில் எனது காருக்கு முன் கீழே மலைப் பாதையில் சரிந்தது. நாங்கள் அவரை பாதுகாப்பாக மீட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“