Advertisment

இந்திய பவுலர்கள் பந்தை செக் பண்ண சொன்ன பாக். வீரர்: வெளுத்து வாங்கிய ஷமி

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக சீம் மற்றும் ஸ்விங் ஆகும் கிரிக்கெட் பந்துகளைப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டிய பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரை முகமது ஷமி கடுமையாக சாடியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Mohammed Shami slams EX Pakistan players for conspiracy theories CWC 2023 Tamil News

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஹசன் ராசாவை இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வெளுத்து வாங்கியுள்ளார்.

worldcup 2023 | mohammed-shami | indian-cricket-team இந்திய மண்ணில் பரபரப்பாக நடைபெற்ற 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா 6வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. 10 போட்டிகளை தொடர்ச்சியாக வென்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையில் உறைய வைத்தது. 

Advertisment

இந்நிலையில், இந்த உலகக் கோப்பை தொடரில் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 7 போட்டிகளில் மட்டும் விளையாடி 24 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டி இருந்தார். அத்துடன், நடப்பு  உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்து அசத்தினார். 

இந்நிலையில், உலகக் கோப்பை தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக சீம் மற்றும் ஸ்விங் ஆகும் கிரிக்கெட் பந்துகளைப் பயன்படுத்தி சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக குற்றம் சாட்டிய பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரை முகமது ஷமி கடுமையாக சாடியுள்ளார். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Sudhar jao’: Mohammed Shami takes a dig at ex-Pakistan cricketers for their inexplicable conspiracy theories

குற்றச்சாட்டு 

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஹசன் ராசா, ஐ.சி.சி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) இந்திய பந்துவீச்சாளர்களுக்கு மற்ற அணிகளை விட அதிக சீம் மற்றும் ஸ்விங் ஆகும் பந்துகளை வழங்குவதாக குற்றம் சாட்டி இருந்தார். இதுதொடர்பாக பாகிஸ்தான் ஊடகத்திடம் அவர் பேசுகையில், “இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கொடுக்கப்பட்ட பந்துகளை சரிபார்க்கப்பட வேண்டும். அவர்கள் அதிக ஸ்விங் மற்றும் சீம் பெறுகின்றனர்.

முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் ஆலன் டொனால்ட் மற்றும் மகயா என்டினி போல் பந்து வீசுகின்றனர். மும்பையில் ஷமியின் பந்தில் கிடைத்த ஸ்விங் அளவைக் கண்டு மேத்யூஸ் கூட ஆச்சரியப்பட்டார். ஐ.சி.சி அவர்களுக்கு உதவி செய்கிறது, அல்லது பி.சி.சி.ஐ அவர்களின் பந்துவீச்சாளர்களுக்கு உதவுகிறது. இதில் மூன்றாவது நடுவரின் தலையீடும் இருக்கலாம்." என்று கூறியிருந்தார். 

வெளுத்து வாங்கிய ஷமி 

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஹசன் ராசாவை இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வெளுத்து வாங்கியுள்ளார். ஷமி பூமாவுக்கு அளித்த பேட்டியில், "நான் அப்போது விளையாடவில்லை. ஆனால் அந்த சதி கோட்பாடுகள் அனைத்தையும் நான் கேட்டுக்கொண்டிருந்தேன். 

நான் எனது முதல் போட்டியில் விளையாடியபோது, ​​நான் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினேன், இரண்டாவதாக நான் நான்கு விக்கெட்டுகளை எடுத்தேன், பின்னர் எனது மூன்றாவது ஆட்டத்தில் மீண்டும் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினேன். சில பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களால் இந்த உண்மையை ஜீரணிக்க முடியவில்லை, இதற்கு நான் எப்படி உதவ முடியும். 

சில முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் தாங்களை உலகின் சிறந்தவர்கள் என்று நினைக்கிறார்கள். அவர்களால் சிறந்த வீரரையும் இந்தியாவின் வெற்றியையும் ஜீரணிக்க முடிவில்லை. என்னைப் பொறுத்தவரை, கடினமாக உழைத்து அணிக்காக சிறப்பாக செயல்படுபவர்கள்தான் சிறந்த கிரிக்கெட் வீரர்கள்.

பந்தின் நிறம் வேறுபட்டது, நாங்கள் வெவ்வேறு நிறுவனங்களிடமிருந்து பந்தை வாங்குகிறோம் என்கிற சதி கோட்பாடுகளை நீங்கள் கண்டுபிடித்து வருகிறீர்கள். ஐ.சி.சி எங்களுக்கு வித்தியாசமான பந்துகளை வழங்குகிறது. தயவுசெய்து உங்கள் வழிகளை சரிசெய்யவும் (பாய் சுதர் ஜாவ் யார்)" என்று ஷமி கூறினார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூட ஹசன் ராசாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்திருந்தார். “கடந்த இரண்டு நாட்களாக இதைப் பற்றி படித்து வருகிறேன். இவர்களுக்கு இருக்கும் அதே விஷயங்கள் எனக்கும் வேண்டும். வேடிக்கையாக இருக்கிறது. உலகத்தின் முன் எங்களை கேலி செய்யாதீர்கள், தயவுசெய்து அந்த அவமானங்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்." என்று கூறினார். 

முன்னதாக, ஹசன் ராசாவின் கருத்துக்கு பதிலளித்த ஷமி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “கொஞ்சம் வெட்கப்படுங்கள். விளையாட்டில் கவனம் செலுத்துங்கள், இந்த முட்டாள்தனத்தை அல்ல. சில நேரங்களில், நீங்கள் மற்றவர்களின் வெற்றியை அனுபவிக்க வேண்டும். இது உலகக் கோப்பை, உங்கள் உள்ளூர் போட்டி அல்ல. நீங்கள் ஒரு காலத்தில் ஒரு வீரராக இருந்தீர்கள், இல்லையா? வாசிம் பாய் அதை விளக்கினார். இன்னும் உங்கள் சொந்த நாட்டு வீரரை கூட நீங்கள் நம்பவில்லையா? நீங்கள் உங்களை மட்டுமே புகழ்ந்து பேசுகிறீர்கள்.

வாசிம் (அக்ரம்) பாய் ஒரு பெட்டியில் பந்து எப்படி வருகிறது, அது எப்படி எடுக்கப்படுகிறது என்பதை விளக்கினார். அவர்கள் இந்தக் கோட்பாட்டைத் தொடர்ந்தனர். ஒரு ரசிகரோ அல்லது இதுவரை கிரிக்கெட் விளையாடாத ஒருவரோ இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுவதை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் நீங்கள் ஒரு முன்னாள் வீரர், இதுபோன்ற விஷயங்களைச் சொன்னால் மக்கள் சிரிப்பார்கள்." என்று ஷமி பதிவிட்டு இருந்தார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Indian Cricket Team Worldcup Mohammed Shami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment