இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான முகமது ஷமி நாளை புதன்கிழமை முதல் போட்டி கிரிக்கெட்டுக்கு திரும்ப இருக்கிறார். அவர் தற்போது நடந்து வரும் ரஞ்சி டிராபியில் பெங்கால் அணிக்காக களமாட உள்ளார் என்று பெங்கால் கிரிக்கெட் சங்கம்தெரிவித்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Mohammed Shami to make a comeback against Madhya Pradesh in Ranji Trophy
இது தொடர்பான செய்திக்குறிப்பில் "பெங்கால் அணியில் ஷமி சேர்ப்பது ஒரு பெரிய ஊக்கமாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த அணியின் மன உறுதியையும் உயர்த்தும், இது ரஞ்சி டிராபியின் அடுத்த சுற்றுக்கு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று பெங்கால் கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது.
பெங்கால் அணி 4 ஆட்டங்களில் 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது, கர்நாடகாவுக்கு எதிரான கடைசி போட்டியில் மூன்று முக்கியமான புள்ளிகளைப் பெற்றது.
ஷமி இந்திய அணியில் கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தான் விளையாடினார். அந்தத் தொடரின் போது அவருக்கு கணுக்கால் காயம் ஏற்பட்டது. இருப்பினும் தொடர் முழுதும் அவர் ஆடி இருந்தார். அதன் பிறகு கணுக்கால் வலிக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதன்பிறகு, மறுவாழ்வு பயிற்சிக்காக பெங்களுருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“