Advertisment

இங்கி., டெஸ்டில் ஷமி பங்கேற்பதில் சந்தேகம்; சூரியகுமாருக்கு வெளிநாட்டில் அறுவை சிகிச்சை?

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கணுக்கால் காயத்திற்குப் பிறகு பந்துவீச்சை மீண்டும் தொடங்காததால், இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார்.

author-image
WebDesk
New Update
Mohammed Shami to miss 2 Tests vs England and Suryakumar Yadav to undergo hernia surgery Tamil News

இந்தியாவில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Mohammed Shami | Suryakumar Yadav: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 25ம் தேதி முதல் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.

Advertisment

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இந்த வாரத்தில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கணுக்கால் காயத்திற்குப் பிறகு பந்துவீச்சை மீண்டும் தொடங்காததால், இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 

இதேபோல், உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ், குடலிறக்கத்தால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால், அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்புவதற்கு அதிக நேரம் ஆகலாம் என்றும், ஐ.பி.எல் தொடரில் அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் பேசுகையில், “ஷமி இன்னும் பந்து வீசத் தொடங்கவில்லை, அவர் என்.சி.ஏ-வுக்குச் சென்று தனது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும். இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகமாக உள்ளது. 

அதேசமயம் சூரியகுமார் யாதவ் விஷயத்தில் அவர் எதிர்பார்த்ததை விட அதிக நேரம் எடுத்துக் கொள்வார். அவரது குடலிறக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் பயிற்சியைத் தொடங்க எட்டு முதல் ஒன்பது வாரங்கள் வரை ஆகலாம். ஐ.பி.எல் போட்டியின் போது அவர் உடல்தகுதியுடன் இருப்பார் என நம்புகிறோம்,” என்று தெரிவித்துள்ளார். 

சூர்யகுமார் யாதவின் குடலிறக்கம் குறித்து பி.சி.சி.ஐ நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி வருவதாகவும், அறுவை சிகிச்சைக்காக அவர் வெளிநாட்டிற்கு அனுப்பப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

நவம்பர் 30 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் ஷமி சேர்க்கப்பட்டார். ஆனால் 33 வயதான அவர் குணமடைந்த பிறகு மீண்டும் சிகிச்சைக்கு உட்பட்டார். பின்னர் பிசிசிஐ தனது செய்திக்குறிப்பில், ஷமி டெஸ்ட் தொடரில் பங்கேற்பது உடற்தகுதிக்கு உட்பட்டது என்றும், பிசிசிஐ மருத்துவக் குழுவால் அவர் அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறியது.

இந்த டெஸ்ட் தொடரில் முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இருப்பார்கள் என்பதால், ஷமி அணிக்கு திரும்புவதை பி.சி.சி.ஐ அவசரப்படுத்தாது என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் புரிந்துகொள்கிறது. இந்திய மண்ணில் சுழற்பந்துவீச்சு முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்தியாவிற்கு அதன் முழு வேகப்பந்து வீச்சாளர்கள் தேவையில்லை.

இந்தியா vs இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்: முழு அட்டவணை:- 

1வது டெஸ்ட்: ஜனவரி 25–29, ஐதராபாத்
2வது டெஸ்ட்: பிப்ரவரி 2-6, விசாகப்பட்டினம் 
3வது டெஸ்ட்: பிப்ரவரி 15-19, ராஜ்கோட் 
4வது டெஸ்ட்: பிப்ரவரி 23-27, ராஞ்சி 
5வது டெஸ்ட்: மார்ச் 7–11, தர்மசாலா. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Mohammed Shami likely to miss 2 Tests against England; Suryakumar Yadav to undergo hernia surgery

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Suryakumar Yadav Mohammed Shami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment