33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 28 ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், பாரிஸில் ஒலிம்பிக்கில் நேற்று திங்கள்கிழமை இரவு நடந்த போல்வால்ட் போட்டியில் ஸ்வீடனைச் சேர்ந்த மோண்டோ டுப்லாண்டிஸ் 6.25 மீட்டர் தூரத்தை எட்டி தங்கம் வென்று அசத்தினார். இதன் மூலம், போல்வால்ட் போட்டியில் தனது இரண்டாவது ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார்.
ஸ்வீடிஷ் வீரர் மோண்டோ டுப்லாண்டிஸ் தனது மூன்றாவது மற்றும் இறுதி முயற்சியில் வியக்கத்தக்க வகையில் 6.25 மீட்டர் தூரத்தை எட்டியதன் மூலம் ஒன்பதாவது முறையாக தனது சொந்த உலக சாதனையை முறியடித்து அசத்தி இருக்கிறார். அவர் தனது முதல் உலக சாதனையை பிப்ரவரி 8, 2020 அன்று பதிவு செய்திருந்தார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்:
போல்வால்ட் போட்டியில் மொண்டோ டுப்லாண்டிஸுக்கு அடுத்தபடியாக, அமெரிக்க வீரர் சாம் கென்ட்ரிக்ஸ் வெள்ளிப் பதக்கத்தையும், கிரீஸின் இம்மானௌலி கராலிஸ் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
குறிப்பிடத்தக்க வகையில், மோண்டோ டுப்லாண்டிஸ் ஏற்கனவே 6.10 மீட்டருக்கு மேல் பாய்ந்து தனது தங்கப் பதக்கத்தைப் பெற்றிருந்தார். ஆனால், பின்னர் அவர் உலக சாதனை உயரத்தை விட ஒரு சென்டிமீட்டர் உயரத்திற்கு நகர்த்தினார். அதனை தனது முதல் முயற்சியை தவறவிட்டார். தனது இரண்டாவது முயற்சியை அவர் தவறவிட்ட பிறகு, மொண்டோ டுப்லாண்டிஸ் தனது மூன்றாவது முயற்சியில் புதிய உலக சாதனை உயரத்தை தாண்டி மிரட்டினார்.
அர்மண்ட் டுப்லாண்டிஸின் உலக சாதனைகள் பட்டியல்:-
உயரம் - போட்டி - தேதி
6.25 மீட்டர் - பாரிஸ் ஒலிம்பிக்ஸ் - ஆகஸ்ட் 5, 2024
6.24 மீட்டர் - வாண்டா டயமண்ட் லீக் ஜியாமென் - 21 ஏப்ரல், 2024
6.23 மீட்டர் - ப்ரீஃபோன்டைன் கிளாசிக் - 17 செப்டம்பர், 2023
6.22 மீட்டர் - ஆல் ஸ்டார் பெர்ச், மைசன் டெஸ் ஸ்போர்ட்ஸ் - 25 பிப்ரவரி, 2022
6.21 மீட்டர் - உலக தடகள சாம்பியன்ஷிப், ஓரிகான் 2022 24 ஜூலை, 2022
6.20 மீட்டர் - உலக தடகள இன்டோர் சாம்பியன்ஷிப், ஸ்டார்க் அரினா 20 மார்ச், 2022
6.19 மீட்டர் - பெல்கிரேட் இன்டோர் மீட்டிங், ஸ்டார்க் அரீனா 7 மார்ச், 2022
6.18 மீட்டர் - முல்லர் இன்டோர் கிராண்ட் பிரிக்ஸ் கிளாஸ்கோ 15 பிப்ரவரி, 2020
6.17 மீட்டர் - ஓர்லென் கோப்பர்நிகஸ் கோப்பை, அரங்கம் பிப்ரவரி 8, 2020
அர்மண்ட் குஸ்டாவ் மோண்டோ டுப்லாண்டிஸின் உலக மற்றும் ஐரோப்பிய பதக்கங்களின் முழு பட்டியல்:-
2015: உலக இளைஞர் சாம்பியன்
2016: உலக ஜூனியர் வெண்கலப் பதக்கம் வென்றவர்
2017: ஐரோப்பிய ஜூனியர் சாம்பியன்
2018: உலக ஜூனியர் சாம்பியன் & ஐரோப்பிய சாம்பியன்
2019: உலக சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கம் வென்றவர்
2021: டோக்கியோ 2020 ஒலிம்பிக் சாம்பியன், ஐரோப்பிய உட்புற சாம்பியன்
2022: உலக சாம்பியன், ஐரோப்பிய சாம்பியன்
2023: உலக சாம்பியன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“