Advertisment

அரசியலில் இருந்து கம்பீர் திடீர் விலகல்: காரணம் இதுதான்!

2019ல் அரசியல் களம் புகுந்த கவுதம் கம்பீர் அந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க சார்பில் டெல்லி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

author-image
WebDesk
New Update
MP Gautam Gambhir requests BJP to relieve him from political duties to focus on cricket Tamil News

கிரிக்கெட்டில் கவனம் செலுத்த இருப்பதால், தன்னை அரசியல் பொறுப்புகளில் இருந்து விடுவிக்குமாறு பா.ஜ.க தலைமையிடம் எம்.பி கவுதம் கம்பீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Gautam Gambhir | Bjp: இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர் கவுதம் கம்பீர். கடந்த 2003 ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமான இவர், 58 டெஸ்ட் போட்டிகளில் 4154 ரன்களையும், 147 ஒருநாள் போட்டிகளில் 5238 ரன்களையும், 37 டி20 போட்டிகளில் 932 ரன்களையும் எடுத்துள்ளார். 

Advertisment

2008 முதல் 2018 வரை ஐ.பி.எல் தொடரில் விளையாடிய கம்பீர் 154 போட்டிகளில் 4217 ரன்களையும் குவித்தார். அவர் 2018ல் அனைத்து வித கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில், 2019ல் அரசியல் களம் புகுந்தார். அந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க சார்பில் டெல்லி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். 

விலகல்

இந்நிலையில், கவுதம் கம்பீர் அரசியலில் இருந்து விலகியுள்ளார். தனக்கு கிரிக்கெட் பொறுப்புகள் இருப்பதால் அரசியல் கடமையில் இருந்து விடுவிக்க வேண்டும் என பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி நட்டாவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.  

இது தொடர்பாக கவுதம் கம்பீர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வரவிருக்கும் கிரிக்கெட் பொறுப்புகளில் கவனம் செலுத்துவதற்காக, எனது அரசியல் கடமைகளில் இருந்து என்னை விடுவிக்குமாறு பா.ஜ.க தேசியத் தலைவர் ஜேபி நட்டாவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

மேலும், மக்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்த பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்" என்று பதிவிட்டுள்ளார். 

காரணம் 

கவுதம் கம்பீர் ஐ.பி.எல்-லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பணிகளில் கவனம் செலுத்துவதற்காக இம்முடிவை எடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

அதேவேளையில், கம்பீரின் இந்த முடிவு பா.ஜ.க-வினரை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் அரசியலில் விலகுவதாக அறிவிக்கும் முன்னர் வரை, தேசியத் தலைமையின் விருப்பப்படி, அவர் மீண்டும் டெல்லி கிழக்கு தொகுதியிலிருந்து களமிறக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்துள்ளது. 

இருப்பினும், மாநில தேர்தல் குழு டெல்லி பா.ஜ.க தலைவர் வீரேந்திர சச்தேவா மற்றும் பொதுச்செயலாளர் ஹர்ஷ் மல்ஹோத்ரா ஆகியோரை டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிட பரிந்துரைத்ததாகவும், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் பா.ஜ.க மூத்த தலைவர் அனில் பலுனி ஆகியோரும் அந்தத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் டெல்லி பா.ஜ.க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 

"சாத்தியமான வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை. ஆனால் கட்சியின் மூத்த தலைவர்கள் அவருக்கு மேலும் ஒரு வாய்ப்பு கொடுக்க ஆதரவு தெரிவித்தனர். ஆனால், இதன்பின்னர் விஷயங்கள் மாறியதாகத் தெரிகிறது, ”என்று அந்த நிர்வாகி கூறினார். 

2019 மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க டெல்லி கிழக்கு தொகுதியில் 56 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதாகக் கூறியது. ஆனால், 55 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை மட்டுமே பெற்று கம்பீர் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸின் அரவிந்தர் சிங் லவ்லி 24 சதவீதத்துக்கும் அதிகமாகவும், ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி 17 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தையும் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: MP Gautam Gambhir requests BJP to relieve him from political duties, to ‘focus on cricket’

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Bjp Gautam Gambhir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment