ஒரு சிறந்த ஆல் ரவுண்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை, இங்கிலாந்தின் மற்றொரு சிறந்த ஆல் ரவுண்டர் வீழ்த்தியிருக்கிறார். ஆம்! 2வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வென்றிருக்கிறது.
இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி 3 டெஸ்ட்கள் கொண்ட தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது.
5ம் நாளான நேற்று 312 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்துக் களமிறங்கிய மே.இ.தீவுகள் 70.1 ஒவர்களில் 198 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, சாம் கரன், வோக்ஸ், பெஸ், ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Stokes ???????? pic.twitter.com/jBJOJOKqOU
— Maniiii (@Maniiiven) July 20, 2020
முன்னதாக 182 ரன்கள் முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்றிருந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், இரண்டாவது இன்னிங்ஸில் டி20 பாணியில் பென் ஸ்டோக்ஸையும் ஜோஸ் பட்லரையும் தொடக்க வீரர்களாக களம் இறக்கினார். ஆனால் இதில் பட்லர் 0 ரன்களில் வெளியேற, 57 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 78 ரன்களை விளாசி நாட் அவுட்டாக திகழ்ந்தார் பென் ஸ்டோக்ஸ்.
ஒருநாள், டி20 தொடர்களில் மாபெரும் வீரராக வலம் வரும் ஜோஸ் பட்லர் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வருகிறார்.
அதாவது, இப்படியும் கூறலாம்,
'ஜோஸ் பட்லர் எனும் மலையை பென் ஸ்டோக்ஸ் எனும் அடர் மேகம் தொடர்ந்து மறைத்துக் கொண்டே இருக்கிறது'
இதனையடுத்து வெஸ்ட் இன்டீஸுக்கு 312 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
254 runs
413 balls faced
27.4 overs bowled
3 wickets
We're running out of words for @benstokes38 ???? pic.twitter.com/KmKxaNaQje
— England Cricket (@englandcricket) July 20, 2020
மே.இ.தீவுகள் டிரா நோக்கில் விளையாடும் என்று பலரும் எதிர்பார்த்திருக்கலாம், ஆனால் ஸ்டூவர்ட் பிராட் மீண்டும் அற்புதமாக பந்துவீசி 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைச் சாய்க்க, விண்டீஸ் 2வது இன்னிங்சில் 37/4 என்று தள்ளாடியது.
ஷம்ரா புரூக்ஸ் (62), பிளாக்வுட் (55) சிறப்பாக ஆடி சதக்கூட்டணி அமைத்தனர். ஆனால் அப்போது மீண்டும் பென் ஸ்டோக்ஸ் தேநீர் இடைவேளையின் போது பிளாக் வுட் கதையை முடிக்க, வெஸ்ட் இன்டீஸின் கிளைமேக்ஸ் வடிவமைக்கப்பட்டது.
198 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அடங்கியது.
பென் ஸ்டோக்ஸ், ஒரே டெஸ்ட் போட்டியில் 250 ரன்களையும் ஒன்றுக்கும் அதிகமான விக்கெட்டுகளையும் எடுத்த முதல் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். கிறிஸ் வோக்ஸ் 34 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்,
ஆட்ட நாயகன் பென் ஸ்டோக்ஸ்.
உலகின் நம்பர்.1 ஆல் ரவுண்டர்
2வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஹோல்டரைக் காட்டிலும் 54 புள்ளிகள் பின் தங்கியிருந்த பென் ஸ்டோக்ஸ், இந்த டெஸ்ட் போட்டியில் 176 மற்றும் 78 ரன்களையும் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய நிலையில், இப்போது 38 புள்ளிகள் கூடுதல் பெற்று ஹோல்டரைப் பின்னுக்குத்தள்ளி நம்பர் 1 ஆல் ரவுண்டராக உருவெடுத்துள்ளார்.
WATCH: Full highlights from a sensational final day in Manchester! ????
— England Cricket (@englandcricket) July 20, 2020
2006-ல் ஆண்ட்ரூ பிளிண்டாப் நம்பர் 1 டெஸ்ட் ஆல்ரவுண்டராகத் திகழ்ந்தார், அவருக்குப் பிறகு இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தற்போது இந்த இடத்தைப் பிடித்துள்ளார்.
மேலும் பென் ஸ்டோக்ஸ் தற்போது எடுத்துள்ள 497 தரவரிசைப் புள்ளிகள், ஜாக் காலீஸுக்கு (517 புள்ளிகள், 2008) அடுத்த இடத்தில் உள்ளது.
இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 3ம் இடத்திலும் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 4ம் இடத்திலும் ரவிச்சந்திரன் அஸ்வின் 5ம் இடத்திலும் உள்ளனர்.
Mr Incredible
இதுகுறித்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறுகையில், "உலக கிரிக்கெட்டின் உச்சத்தில் ஒரு வீரரை தனது சக்தியின் உச்சத்தில் இருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அனைவரும் புரிந்துகொள்கிறார்கள், அவர் ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு முறையும் சாதிக்கிறார்.
அவர் Mr Incredible. சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் பென் ஸ்டோக்ஸ், அணிக்கு எவ்வளவு மதிப்புமிக்கவர் என்பதை காட்டுகிறார்" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.