MS Dhoni Tamil News: இந்திய கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமாக கேப்டன்களில் முக்கியமானவர் மகேந்திர சிங் தோனி. ஐசிசி நடத்திய 3-வகையாக உலகக் கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ள இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எனினும், ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது நடப்பு சீசனுக்காக அவர் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளார். தோனி வலைப் பயிற்சியில் ஈடுபட்ட சில வீடியோக்கள் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகியது.
இந்நிலையில், தோனி விளம்பரத்தில் போலீசாக நடித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருவதோடு, தங்களின் சுவையான கமெண்டுகளையும் விட்டுச் சென்றுள்ளனர்.

அவ்வகையில், ஒரு ரசிகர் “போலீஸ் சீருடையில் ‘தல’ கவர்ச்சியாகத் தெரிகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் ‘எந்தவொரு ஆண் முக்கிய கதாப்பாத்திரத்திலும் அவர் கச்சிதமாகத் இருப்பார்’ என்று பதிவிட்டுள்ளார்.
இன்னொரு ரசிகர், “சிங்கம் 3 படத்தில் தோனியை நடிக்க வைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil