தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த பிறகு, அவரைச் சுற்றியே விளையாட்டு செய்திகள் பக்கம் சுழன்று வருகிறது. அந்தளவுக்கு அவரைப் பற்றிய நிறைய கண்டென்ட்கள் உள்ளன. இந்த செய்தியும் அப்படி ஒன்றானதே.
தோனிக்கு அமைதியின் சிகரம் என்றாலும், களத்தில் அவரது வார்த்தைகள் ஈட்டி போல சீறிப் பாயும். இவை பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை. அரிதாகவே, தோனி சக வீர்ர்களை நோக்கி வீசும் வார்த்தைகள் மைக்கில் பதிவாகும்.
அப்படி சில அதிர்ச்சியான தோனியின் மைக் கண்டென்ட்கள் உங்களுக்காக,
செப்.2017ம் ஆண்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், டேவிட் வார்னருக்கு குல்தீப் யாதவ் பந்து வீசத் தயாரானார். ஸ்டெம்புக்கு பின்னே நின்றுக் கொண்டிருந்த தோனி, “Thoda peeche dalo (pull your length back a bit) என்று சொன்னார். ஏனெனில், அப்படி வீசினால், வார்னர் கட் ஷாட் ஆடும் பட்சத்தில், எட்ஜ் ஆக வாய்ப்புள்ளது என்று கணிப்பில் தோனி அப்படி சொல்ல, குல்தீப் அப்படியே பந்து வீச, சொல்லி வைத்தாற் போல் வார்னர் அதே போன்று அவுட்டானார்.
How did Dhoni help Kuldeep stun #AUS? Watch & catch the best moments from the 1st Paytm #INDvAUS ODI on #CricketCountdown, on Star Sports. pic.twitter.com/kiSlH5QC6D
— Star Sports (@StarSportsIndia) September 18, 2017
அதே போட்டியில், மற்றொரு ஸ்பின்னரான சாஹல் ஓவரை ஆஸ்திரேலியர்கள் புரட்டி எடுக்க, தோனி சாஹலிடம் Dande pe daal. (Bowl on the stumps) ஸ்டெம்ப்புக்கு நேராக பந்து வீசக் கூறினார்.
அதேபோல், தோனி சொன்னதை குல்தீப் பின்பற்றாத போது, “Tu bhi nahin sunta hai kya (You also won’t listen)?”. நீ கவனிக்க மாட்டாயா? என்று கோபப்பட்ட தோனி, குல்தீப் தன் தவறை சரி செய்த போது, “Aise, aise dalo (bowl it like this).” இந்த மாதிரி பந்து வீசு என்று குறிப்பிட்டார்.
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், லோகி ஃபெர்கியூசனை அவுட் செய்ய, கிரீஸுக்கே முன்பே கால் வைத்து பந்து வீசச் சொன்னார் தோனி. குல்தீப் அதே போன்று பந்து வீச, பெர்கியூசன் தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார்.
அதே போட்டியில், ட்ரெண்ட் போல்ட்டை அவுட்டாக்க, 'அவன் எப்படியும் உன் பந்தை தடுத்தாட தான் பார்ப்பான். அதனால், around the wicket வந்து ஸ்டெம்புக்கு நேராக வீசச் சொன்னார் தோனி.
“Ye rokega, dusri side se daal sakta hai. Yaha se andar nai ayegi.” (He will defend, try bowling from around the wicket.)
குல்தீப் 'ஆமாம் சாமி' போட, தோனி சொன்னது போன்றே பந்தை defend செய்ய போல்ட் முயல, ஸ்லிப்பில் ரோஹித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
This is GOLD
MSD behind the stumps (also behind the mic)pic.twitter.com/6kMijXIysh
— Cricketopia (@CricketopiaCom) August 17, 2020
அகமதாபாத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், தோணி ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த போது, squarer பகுதிக்கு செல்ல ஸ்ரீசாந்தை அறிவுறுத்தினார். ஆனால், அவர் சரியாக அந்த திசையில் நிற்காமல், வேறு இடத்தில் நிற்க கடுப்பான தோனி,
“Oye Sree girlfriend nahi hai udhar, idhar aaja thoda”(Sreesanth your girlfriend is not there, please come a little squarer) - ஏய் ஸ்ரீசாந்த், உன் கேர்ள் ஃபிரெண்ட் அங்கு இல்லை. சற்று squarer பகுதிக்கு வா' என்று சப்தமிட்டார்.
'
“the Tarak Mehta” மந்திரம்
R Ashwin and Dhoni had a code word between themselves and it was used to keep the batsman guessing. Whenever Dhoni wanted the off-spinner to surprise the batsman with the wrong-un (ulta), he would call for the “Tarak Mehta”. There is a television show which airs in with the name “Tarak Mehta Ka Ulta Chasmah’.
பேட்ஸ்மேனின் நகர்வுகளை பொறுத்து, தோனியும், அஷ்வினும் சில குறியீடுச் சொற்கள் பயன்படுத்தி பேசிக் கொள்வார்கள். பேட்ஸ்மேனை ஏமாற்ற வேண்டும் என்று தோனி நினைத்தால், உல்டா என்று சொல்வார். உடனே பந்தை பேட்ஸ்மேன் கணித்த இடத்திற்கு மாற்றாக அஷ்வின் வீசுவார். அதாவது, “Tarak Mehta Ka Ulta Chasmah’ எனும் ஹிந்தி டிவி சீரியல் பெயரை பயன்படுத்தி, இருவரும் பல பேட்ஸ்மேன்களை ஏமாற்றி இருக்கின்றனர்.
2014ல் நடந்த இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டியில், ஜடேஜா சற்றே அதிகமாக ரன்கள் விட்டுக் கொடுக்க, கடுப்பான தோனி,
“Jaddu thoda off mein daal. Pujara ko udhar taali bajane nahi rakha hai“(Jadeja bowl on the off stump. Pujara is not standing there to clap) - ஜடேஜா, ஆஃப் ஸ்டெம்ப்புக்கு பவுல் பண்ணு. புஜாரா உனக்கு கைத்தட்ட அங்கு நிற்கவில்லை, நீ வேறு இடத்தில் பவுல் பண்ண) என்றதும், உடனே தனது பவுலிங்கை ஜடேஜா மாற்றினார்.
2012ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், பவுலிங்கில் தனது லைன் அண்ட் லெந்த் கண்டுபிடிக்க முடியாமல் இஷாந்த் ஷர்மா தடுமாற நிலைமையை உணர்ந்து கொண்ட தோனி,
“Agar chauka gaya toh mera risk hai, tu bindaas daal. Tujhe agar ek fielder aur chahiye toh main bula lunga. Mujhe koi problem nahi hai.”(It’s on me if the ball gets hit for a boundary, you just bowl. I’ll place another fielder too if you want) - அவன் பவுண்டரி அடித்தால் அதை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ பந்து வீசு போதும், உனக்கு தேவை என்றால், நான் வேறொரு பீல்டரை உனக்கு ஏற்ப கொண்டு வருகிறேன்" என்றார்.
இதனால் பதட்டநிலையில் இருந்து சற்று நிம்மதியடைந்த இஷாந்த், அதன்பிறகு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டி ஒன்றில், கேப்டன் தோனி, விராட் கோலியை பந்து வீச அழைத்த போது, அவர் கெவின் பீட்டர்சனை போல்டாக்கினார்.
வாட்சனையை அவுட் செய்த களிப்பில், கோலி வெவ்வேறு சில வேரியேஷன்களை முயற்சி செய்து லந்து காட்ட, கோலியிடம் சென்ற தோனி,
“Jitna bola hai utna kar, bowler mat bann” (Do what you are being told, don’t try to be a bowler) - உன்னிடம் என்ன சொன்னதோ, அதை மட்டும் செய், பவுலராக முயற்சி செய்யாதே என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.