வரவிருக்கும் ஐ.பி.எல் 2025 ஏலத்திற்கான பி.சி.சி.ஐ-யின் விதிகளைப் பொறுத்து சி.எஸ்.கே-வுடன் வருங்காலத்தில் விளையாடுவது குறித்த முடிவு இருக்கும் என்று தோனி கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: ‘Will take call after rules formalised’ MS Dhoni’s IPL future depends on retention rule
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) அடுத்த வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக உருவாக்கும் தக்கவைப்பு விதியால் ஐ.பி.எல் வீரராக எம்.எஸ். தோனியின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 4 வீரர்களுக்கு மேல் தக்கவைத்துக் கொள்ள முடிந்தால், தோனி அடுத்த சீசனில் விளையாட ஆர்வமாக உள்ளார் என்பது இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு தெரியவந்துள்ளது.
பி.சி.சி.ஐ நிர்வாக அலுவலர்களுடான சந்திப்பின் போது, சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் 2021-ம் ஆண்டு வரை இருந்த விதியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அந்த விதியின்படி, ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஓய்வு பெற்றிருந்தால், அவர் சர்வதேச அணியில் இடம் பெறாத வீரராக கருதப்படுவார். இந்த விதி மீண்டும் கொண்டு வரப்பட்டால், பெரிய வீரர் ஏலம் நடந்தால், பி.சி.சி.ஐ அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள, அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலில் (கேப்டு பிளேயர்களைத் தவிர) தோனியை சி.எஸ்.கே தக்க வைத்துக் கொள்ள முடியும்.
கடைசி தக்கவைப்புக் கொள்கையின்படி, சர்வதேச அணியில் இடம்பெறாத வீரருக்கு உரிமையாளரால் தக்கவைக்கப்படும் ஒரு ஆட்டக்காரருக்கு ரூ.4 கோடி மட்டுமே செலவாகும்.
தோனி ஹைதராபாத்தில் ஒரு வீரராக தனது எதிர்காலம் பற்றி கூறினார். “அதற்கு நிறைய நேரம் இருக்கிறது, வீரரை தக்கவைத்தல் போன்றவற்றில் அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். இப்போது முடிவு எங்கள் கைகளில் இல்லை. எனவே, விதிகள் மற்றும் விதிமுறைகள் முறைப்படுத்தப் பட்டவுடன், நான் கூறுகிறேன். ஆனால், அது அணியின் நலனுக்காக இருக்க வேண்டும்.” என்று தோனி கூறினார்.
சமீபத்தில் 43 வயதை எட்டிய தோனி, ருதுராஜ் கெய்க்வாடிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்த பிறகு, கடந்த ஐபிஎல் முழுவதும் எந்த உடற்தகுதி பிரச்னையும் இல்லாமல் விளையாடினார்.
பெரும்பாலான உரிமையாளர்களைப் போலவே, சி.எஸ்.கே அணி முடிந்தவரை தோனி தொடர வேண்டும் என்பதில் -ஆர்வமாக உள்ளது. ஒரு பெரிய ஏலத்தில், சி.எஸ்.கே தோனியை முடிந்தவரை தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறது. விவாதங்களின்படி, அணிகள் குறைந்தபட்சம் 6 தக்கவைப்புகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றன, குறைந்தபட்சம், ஒரு இடம் சர்வதேச அணியில் இடம் பெறாத வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அப்படியானால், சி.எஸ்.கே அந்த இடத்தில் தோனியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். மேலும், அவர்களின் வீரர்களின் மையத்தையும் வைத்திருக்க முடியும். அது மாறினால், ருதுராஜ் கெய்வாட், மதீஷா பத்திரனா, ரவீந்திர ஜடேஜா மற்றும் டேரில் மிட்செல் அல்லது ரச்சின் ரவீந்திரா ஆகியோரில் ஒருவரை சி.எஸ்.கே தக்க வைத்துக் கொள்ள முடியும்.
இருப்பினும், விதியை மாற்றுவதற்கான CSK இன் அழைப்புக்கு மற்றவர்களிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. இதற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் எதிர்ப்பு தெரிவித்தார். மற்ற உரிமையாளர்கள் கூட 2021 வரை இருந்த இந்த விதியை மீண்டும் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டவில்லை மற்றும் ஓய்வு பெற்ற வீரர்கள் மீண்டும் ஏலத்திற்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“