இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற கேப்டனாக எம்.எஸ் தோனி திகழ்கிறார். அவரது தலைமையிலான இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என கோப்பைகளை வாங்கிக் குவித்தது. மேலும், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 3 ஃபார்மெட்டுகளிலும் கொடி கட்டி பறந்தது.
ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்திய தோனி, அந்த அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வாகை சூட உதவினார். அவர் கடந்த சீசனுடன் கேப்டன் பதவியில் இருந்து இறங்கிய நிலையில், தற்போது இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சி.எஸ்.கே-வின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Video of MS Dhoni dancing to Pahadi song with wife goes viral; fans call it ‘a beautiful moment’
ஐ.பி.எல் 2025 தொடரில் தோனி விளையாடுவாரா மாட்டாரா என்ற குழப்பம் நீடித்த நிலையில், ஐ.பி.எல் ஏலத்திற்கு முன் வெளியிடப்பட்ட தக்கவைப்பு விதிமுறை பட்டியலில் இடம்பெற்ற அன்கேப்டு வீரர் விதிமுறைப்படி, தோனி சென்னை அணியில் தக்கவைக்கப்பட்டார். இதனால், அவர் இந்த சீசனில் களமாடுவது உறுதியாகியுள்ளது. தற்போது அவரது வருகைக்காக ”நீ பொட்டுவச்ச தங்கக்குடம்” பாடலுடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், தோனி தனது மனைவியுடன் நாட்டுப்புற பாடலுக்கு டான்ஸ் போட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் பஹாடி நாட்டுப்புற பாடலுக்கு தோனியும் அவருடைய மனைவியும் நடனமாடியுள்ளார்கள்.
வட இந்திய மலைப்பகுதிகளில் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி, ரிஷிகேஷில் உள்ளூர் மக்களுடன் பஹாடி நாட்டுப்புற பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. வைரலாகும் அந்த வீடியோவில் தோனியும் அவருடைய மனைவியும் இணைந்து 'குலாபி ஷராரா' என்ற பாடலுக்கு நடனமாயுள்ளார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“