Amit Mishra Reveals Dhoni Eats His Bat reason: ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களை குவிக்க முடிந்தது. 209 ரன்கள் என்கிற இமாலய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 17.4 ஓவர் முடிவில் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Advertisment
போட்டிக்கு பின் தோனியிடம் பிளே ஆஃப் செல்ல விரும்புகிறீர்களா? என கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதிலளித்த அவர், எனக்கு கணக்கு சுத்தமாக வராது. நெட் ரன்ரேட் பெரிய அளவில் உதவாது என நினைக்கிறேன். ஐபிஎலை என்ஜாய் செய்து விளையாட வேண்டும். மற்ற எதையும் நினைத்து பார்க்காமல், அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற சிந்தனையிலேயே இருக்க வேண்டும். பிளே ஆஃப் சென்றால் மகிழ்ச்சிதான். செல்லவில்லை என்றால், இதுதான் கடைசி சீசன் கிடையாது. அடுத்த சீசனில் பார்த்துக்கொள்வோம் என்றார்.
இதற்கிடையில், மேட்சின் போது தோனி களமிறங்குவதற்காக பெவிலியனில் காத்திருந்த சமயத்தில், தனது பேட்டை பல்லால் கடித்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் கேமராவில் பதிவானதால், போட்டோவை ஷெர் செய்து தோனி ஏன் பேட்டை கடிக்கிறார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கான பதிலை இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
இதுகுறித்து ட்வீட் செய்த அவர், "தோனி ஏன் அடிக்கடி தனது பேட்டை கடிக்கிறார் என நீங்கள் யோசித்திருப்பீர்கள். அவர் தனது பேட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதற்காக, பேட்டில் உள்ள டேப்பை கடித்து அகற்றுகிறார். தோனியின் பேட்டில் டேப் அல்லது நூல் இருப்பதை எப்போதுமே பார்த்திருக்க மாட்டீர்கள்" என பதிவிட்டிருந்தார்.
In case you’re wondering why Dhoni often ‘eats’ his bat. He does that to remove tape of the bat as he likes his bat to be clean. You won’t see a single piece of tape or thread coming out of MS’s bat. #CSKvDC#TATAIPL2022