இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது பெயரை தவறாகப் பயன்படுத்தியதாக ஆர்கா ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் இருவர் மீது ராஞ்சியில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த நிலையில். ஜூடிசியல் மாஜிஸ்திரேட் (முதல் வகுப்பு) ராஜ் குமார் பாண்டே, வெள்ளிக்கிழமை (ஜன.5,2023) வழக்கின் சாட்சிகளில் ஒருவரின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்து, அடுத்த விசாரணையை ஜனவரி 20 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
ஐபிசி பிரிவுகள் 406 (குற்றவியல் நம்பிக்கை மீறல்) மற்றும் 420 (ஏமாற்றுதல்) ஆகியவற்றின் கீழ் விசாரணை கோரி தோனி வழக்கு தொடரந்துள்ளார்.
தோனியின் வழக்கறிஞர் தயானந்த் சிங் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “தோனி மற்றும் ஆர்கா ஸ்போர்ட்ஸ், மிஹிர் திவாகர் மற்றும் சௌமியா தாஸ் ஆகியோருக்கு இடையே அவரது பெயரில் கிரிக்கெட் அகாடமிகள் மற்றும் விளையாட்டு வளாகங்கள் தொடங்க ஒப்பந்தம் இருந்தது. உரிமைக் கட்டணம் தோனிக்கு நேரடியாகச் செலுத்தப்படும் என்றும், ராயல்டி கட்டணத்தில் 70:30 பங்கு இருக்கும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது” என்றார்.
தொடர்ந்து, “ஒப்பந்த கடிதத்தில் தோனி 2017 மே 7 அன்று கையெழுத்திட்டார். தொடக்கத்தில் தோனிக்கு கொஞ்சம் பணம் கொடுக்கப்பட்டது. ஆனால் பின்னர் அவர் பணம் பெறுவதை நிறுத்தினார்.
இதற்கிடையில், கிரிக்கெட் அகாடமிகள் மற்றும் விளையாட்டு வளாகங்கள் தோன்றின. எனவே ஆகஸ்ட் 15, 2021 அன்று ஒப்பந்த அதிகாரத்தை ரத்து செய்தோம்.
சுமார் 22-23 அகாடமிகள் மற்றும் வளாகங்கள் வந்துள்ளதாக நாங்கள் நம்புகிறோம், மேலும் இழப்புகள் ரூ. 15 கோடிக்கு மேல் என்று நாங்கள் கருதுகிறோம்” என்றார்.
மேலும், அதிகாரத்தை ரத்து செய்துவிட்டு, அந்த நிறுவனத்துக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக திவாகர் கூறினார்.
சட்ட அறிவிப்புக்கு பதிலளிக்கும் விதமாக, ஆர்கா மார்ச் 2, 2023 அன்று "அதிகாரக் கடிதத்தை" "தவறாகப் பயன்படுத்துவதை" மறுத்தார். பதிலில் அவர்கள் எந்த மூன்றாம் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறியுள்ளனர்.
ஆங்கிலத்தில் வாசிக்க : MS Dhoni files criminal case against ex-business partners over alleged fraud of Rs 15 crore
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“