Ms Dhoni | Indian Cricket Team | Sports: இந்திய கிரிக்கெட் அணியின் புகழ் பெற்ற கேப்டன்களுள் ஒருவராக முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி திகழ்ந்து வருகிறார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனியின் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைதளத்தில் அவ்வப்போது வைரலாகி வந்த வண்ணம் உள்ளன.
அண்மையில் கூட அமெரிக்கா சென்ற தோனி கால்ப் விளையாட்டு மைதானத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்தன. சமீபத்தில், ஆட்டோகிராஃப் போடும் போது தோனி ரசிகருடன் உரையாடும் வீடியோ வைரலானது.
நீண்ட முடி மற்றும் தாடியுடன் காணப்பட்ட தோனி, ரசிகர் ஒருவருக்கு சின்ன பேட்களில் ஆட்டோகிராஃப் போட்டார். அப்போது அவரிடம் மினியேச்சர் பேட்களை ஒப்படைத்த பிறகு, தோனி ரசிகரிடம் அவர் வைத்திருந்த சாக்லேட் பாக்ஸை திரும்பக் கொடுக்கும்படி கேட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது.
ஆங்கிலத்தில் படிக்க:- Young Ranchi cricketer gets bowled over as Dhoni gives him lift on his motorbike. Watch
பைக்கில் லிஃப்ட் கொடுத்த தோனி - வைரல் வீடியோ
இந்த நிலையில், தோனி இளம் கிரிக்கெட் வீரருக்கு தனது பைக்கில் லிஃப்ட் கொடுத்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட தோனி பயிற்சி முடிந்த பின் தன்னுடன் பயிற்சியில் ஈடுபட்ட இளம் கிரிக்கெட் வீரருக்கு பைக்கில் லிஃப்ட் கொடுத்துள்ளார்.
ஹெல்மெட் அணிந்தவாறு தோனி தனது ஆர்எக்ஸ் 350 பைக்கில் அந்த இளம் வீரரை ஏற்றிக்கொண்டு ராஞ்சி சாலையில் பயணம் செய்துள்ளார். அந்த பைக் பயணத்தை இளம் வீரர் தனது செல்போனில் செல்ஃபி வீடியோவாக எடுத்து அதை சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“