News about MS Dhoni, Harmanpreet Kaur in tamil: 8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தென் ஆப்பிரிக்க மண்ணில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்தத் தொடரில், நேற்று இரவு நடந்த முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக பெத் முனி 54 ரன்களும், கேப்டன் மெக் லானிங் 49 ரன்களும் எடுத்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷிகா பாண்டே 2 விக்கெட்டுகள் எடுத்தார். இதனைத் தொடர்ந்து 173 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை.
இந்திய அணியின் டாப் ஆடர் வீராங்கனைகளான ஷபாலி வர்மா (9), ஸ்மிர்தி மந்தனா (2), யாஸ்திகா பாட்டியா (4) சொற்ப ரன்னில் அவுட் ஆகி நடையை கட்டினர். இதனால், 28 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணிபரிதவித்தது. இதன்பிறகு வந்த ஜெமிமா ரோட்ரிக்சும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் இணைந்து சிறப்பாக விளையாடினர். இந்த ஜோடியில் ரோட்ரிக்ஸ் 43 ரன்களில் அவுட் ஆனார்.
எனினும், களத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நின்றதால் நம்பிக்கை குறையவில்லை. ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை நொறுக்கி அள்ளிய அவர், அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை விரட்டி அரைசதம் விளாசினார். இருப்பினும், அவர் 52 ரன்கள் எடுத்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட் ஆனார். அவர் வெளியேறிய போது இந்தியாவின் வெற்றிக்கு 32 பந்தில் 40 ரன்கள் தேவைப்பட்டது.
பின்னர் வந்த விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் (14 ரன்), சினே ராணா (11 ரன்) ஏமாற்றம் அளித்தனர். கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்ட நிலையில், பரபரப்பான கடைசி ஓவரை வீசிய சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்லி கார்ட்னெர், துல்லியமாக பந்துகளை வீசி ராதா யாதவின் (0) விக்கெட்டை வீழ்த்தியதுடன் 10 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இறுதியில், 20 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா
அப்போ டோனி… இப்போ ஹர்மன்பிரீத்: இதயத்தை நொறுக்கிய உலகக் கோப்பை ரன் அவுட்- வீடியோ
இந்நிலையில், நேற்றை ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் ரன் அவுட் ஆனது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் ரன்-அவுட்டை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.

2019ம் ஆண்டில் இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா நியூசிலாந்து அணியுடன் மோதும். அந்த ஆட்டத்தில் 239 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணியின் டாப் ஆடர் வீரர்களான ராகுல், ரோகித், அப்போதைய கேப்டன் கோலி என அனைவரும் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து இருப்பர். அப்படியான இக்கட்டான கட்டத்தில் அதிரடியாக விளையாடிய தோனி
இந்நிலையில், உலகக் கோப்பையை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் தோனி போல் ரன்அவுட் ஆகி ரசிகர்களின் இதயம் நொறுங்கி போகச் செய்துள்ளார். அவர்களின் இந்த இரண்டு ரன் அவுட்களுமே உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியின் முக்கியமான கட்டத்தில் நடந்துள்ளன. அதுமட்டுமில்லாமல், அவர்கள் இரண்டு பேருமே லெக் சைடில் தான் ஷாட் அடித்துள்ளார்கள். இரு கேப்டன்களின் ஜெர்சி எண்களும் 7. துரதிர்ஷ்டவசமாக, இந்தியா இரண்டு முக்கிய ஆட்டங்களிலும் வெற்றி பெற முடியவில்லை.
இந்த நிலையில், இந்த ஒற்றுமைகளை வைத்து தோனி மற்றும் ஹர்மன்பிரீத்தை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள். மேலும், அவர்கள் பதிவிட்டு மற்றும் பகிர்ந்து வரும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
WC Semi Finals
— im_nitin1421 (@DamalaNitin) February 23, 2023
Run Chase
Top order failure
Jersey no.7
Fifty
Run-out
A billion hopes shattered
Different year, different tournament, same old heartbreak!🙂💔#INDWvsAUSW #WcSemiFinals #MSDhoni𓃵 #HarmanpreetKaur 🫡 pic.twitter.com/oGZyX1nXz6
Luck never favors India In Big Matches. BTW well played captain Harmanpreet Kaur 👏 #INDWvsAUSW pic.twitter.com/i2aHKOFKfB
— Sir BoiesX 🕯 (@BoiesX45) February 23, 2023
டி20 உலகக் கோப்பை: 2வது அரையிறுதி ஆட்டம் இன்று
இந்நிலையில், இன்று நடக்கும் 2வது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil