ஓசூரில் முழுநேர கிரிக்கெட் பள்ளி… பாசத்தை மறக்காத 'தல' தோனி
தமிழ்நாட்டின் மீதும், தனது ரசிகர்கள் மீதும் எப்போதும் தனி பாசம் வைத்துள்ள தோனி தன்னுடைய கிரிக்கெட் வாழ்கையின் கடைசி போட்டி சென்னை மண்ணில் நடைபெறும் என்று அறிவித்தார்.
Chennai Super Kings skipper MS Dhoni inaugurated the Super Kings Academy at the MS Dhoni Global School in Hosur Tamil News
MS Dhoni - Super Kings Academy Tamil News: உலக கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியை மிளிரச் செய்த இந்திய கேப்டன்களில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு முக்கிய இடம் உண்டு. ஏனென்றால், இவரது தலைமையிலான இந்திய அணி, ஐசிசி நடத்திய 3 வகையான (ஐசிசி உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐசிசி டி20 உலகக் கோப்பை ) உலக கோப்பையையும் கைப்பற்றியது. மேலும் ஏனைய அணிகளால் பதிவு செய்யப்பட ரெக்கார்டுகளையும் தகர்த்தெறிந்தது.
Advertisment
கடந்த 2004 ஆம் ஆண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்திய அணியில் அறிமுகமாகிய தோனி 2019ம் ஆண்டோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்தார். சுமார் 16 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடிய அனுபவம் கொண்ட இவர் 90 டெஸ்ட், 350 ஒருநாள் மற்றும் 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், இத்தனை ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் படைத்துள்ள சாதனைகளும் ஏராளம்.
தற்போது ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்று வழிநடத்தி வரும் தோனி, இன்னும் சாதனை படைக்கும் ஓட்டத்தில் ஒருவராகவே இருக்கிறார். ஒரு கேப்டனாக அவரின் ஆளுமைக்கும், களத்தில் கூலாக இருந்து சாதிக்கும் அவரின் திறமைக்கும் உலகம் முழுதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தவிர, தற்போது கிரிக்கெட் ஆடும் இளம் தலைமுறைக்கு மிகப்பெரிய முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் அவர் இருந்து வருகிறார்.
பாசத்தை மறக்காத 'தல' தோனி
ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வரும் தோனி, கேப்டனாக பொறுப்பேற்ற அவர் ஏறக்குறைய அனைத்து சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும், 4 ஐபிஎல் கோப்பைகளையும், 2 சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று கொடுத்துள்ளார். தவிர, சென்னையை தன்னுடைய இரண்டாவது வீடாக கருதும் அவரை தமிழக ரசிகர்கள் "தல" என்று அழைத்து நெகிழ்ந்தும், கொண்டாடியும் வருகிறார்கள்.
தமிழ்நாட்டின் மீதும், தனது ரசிகர்கள் மீதும் எப்போதும் தனி பாசம் வைத்துள்ள தோனி தன்னுடைய கிரிக்கெட் வாழ்கையின் கடைசி போட்டி சென்னை மண்ணில் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில், கிரிக்கெட்டின் மீது ஆர்வமுள்ள தமிழக சிறுவர்கள், இளைஞர்கள் நவீன வசதிகளுடன் பயிற்சிகளை மேற்கொள்ள சிஎஸ்கே நிர்வாகம் சென்னை மற்றும் சேலத்தில் ஏற்கனவே இரண்டு அகாடமியை தொடங்கியுள்ளது. அந்த வரிசையில் சென்னை நிர்வாகத்துடன் இணைந்துள்ள எம்எஸ் தோனி ஓசூரில் முதல் முறையாக முழுநேர கிரிக்கெட் பயிற்சி பள்ளியை தொடங்கி வைத்துள்ளார்.
Chennai Super Kings skipper MS Dhoni inaugurated the Super Kings Academy at the MS Dhoni Global School in Hosur Tamil News
“எம்எஸ் தோனி குளோபல் ஸ்கூல்” என்ற பெயருடன் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள அந்த பள்ளியில் பயிற்சி செய்ய மற்றும் விளையாட என 8 பிட்ச்கள் அமைக்கப்பட்டுள்ளன. நவீன கிரிக்கெட் வசதிகளும் உள்ள இந்த மைதானம் இந்தியாவிலேயே 3வது மிகப்பெரிய கிரிக்கெட் பள்ளியாகும். தோனி நினைத்திருந்தால் இந்தப் பள்ளியை வடமாநிலங்களில் தொடங்கியிருக்கலாம். ஆனால், தமிழகம் மீது அவர் கொண்ட அன்பினால் சென்னை அணியுடன் இணைந்து, ஓசூருக்கு நேரில் வந்து திறந்து வைத்துள்ளார்.
இந்த திறப்பு விழாவில் தோனி பேசுகையில், “நான் பள்ளிகளுக்கு செல்லும் போதெல்லாம் என்னுடைய காலத்தில் பள்ளியில் நேரங்களை செலவிட்டது தான் எனக்கு நினைவுக்கு வரும். பள்ளியில் இருப்பதை வாழ்வின் மிகச் சிறந்த நேரமாக நான் எப்போதும் கருதுகிறேன். அங்கே படிப்பு, விளையாட்டு என எதுவாக இருந்தாலும் அது உங்களது வாழ்வில் மீண்டும் வரவே வராது. உங்களுக்கு அங்கு மறக்க முடியாத நல்ல நினைவுகள் கிடைக்கும். அங்கு நீங்கள் நல்ல நண்பர்களை உருவாக்கிக் நீண்டகாலம் நட்பில் இருப்பீர்கள்.
ஆனால் பள்ளி முடிந்து பொறுப்புகளை நீங்கள் ஏற்கும்போது உங்களுடைய சிறுசிறு குணங்களையும் நீங்கள் பலமாக மாற்ற வேண்டும். கட்டுக் கோப்பு, நன்னடத்தையாக இருப்பதுடன் இளம் மற்றும் மூத்த ஆசிரியர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொரு நாளும் எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும். அந்த நல்ல குணங்கள் உங்களுடன் கடைசிவரை இருக்கும். அதே போல் இங்கும் நல்ல குணங்களை கற்று கிடைக்கும் வசதிகளை பயன்படுத்தி நீங்கள் பெரிய அளவில் வரவேண்டும்” என்று அவர் கூறினார்.
MS Dhoni inaugurated the "MS Dhoni Global School". This is really great initiative and thing from MS Dhoni for young talents. pic.twitter.com/oJtxq1rDof