Ms Dhoni | Chennai Super Kings | IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 6 போட்டிகளில் ஆடி 4ல் வெற்றி, 2ல் தோல்வி என 8 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. வருகிற வெள்ளிக்கிழமை லக்னோவில் நடக்கும் 34வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
தோனி ஹெல்த் அப்டேட்
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி மும்பை இந்தியன்சுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு முழங்கால் வலியால் அவதியுற்றார். ஆட்டத்தின் போது, மதீஷா பத்திரனா வீசிய பந்து அவரது முழங்காலில் தாக்கியதில் இருந்து தோனி அசௌகரியமாக இருந்தார். வலியில் முகம் சுளித்தார். இருப்பினும், அவர் தனது விக்கெட் கீப்பிங்கை தொடர்ந்தார். ஆனால், போட்டிக்குப் பிறகு அவர் அவர் நொண்டி நொண்டி நடந்து சென்றதால், அவரின் காயம் தீவிரமடைந்து இருக்கும் என ரசிகர்கள் அச்சமடைந்துள்ளனர்.
தோனியின் அனுபவம் மற்றும் தலைமைத்துவம், விக்கெட்டுக்கு பின்னால் அவரது வழிநடத்துதல் மற்றும் அவரின் அதிரடி பேட்டிங் ஆகியவை சென்னை அணிக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. தான் காயத்தால் அவதியுற்றாலும் அதை ஓரம் கட்டி விட்டு அணியின் வெற்றிக்காக உழைத்து வருகிறார்.
இந்த நிலையில், லக்னோ அணிக்கு எதிரான போட்டிக்காக சென்னை அணி லக்னோ புறப்பட்ட நிலையில், விமான நிலையத்தில் அவர் சீராக நடந்து சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தோனி நல்ல நிலையில் இருப்பது சென்னை அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.
தோனியின் நீடித்த முழங்கால் காயம் சமீபத்திய ஆட்டங்களில் மைதானத்தில் அவரது செயல்பாட்டை தடுத்தது. சென்னை அணியின் பந்துவீச்சு ஆலோசகர் எரிக் சிம்மன்ஸ், தோனி அவதிப்படுவதை உறுதிப்படுத்தினார். இதுகுறித்து பேசிய சி.எஸ்.கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதனும் தோனி நல்ல நிலையில் உள்ளார் என்பதை உறுதிப்படுத்தினார். "அவர் (தோனி) வலியில் இருந்தார். ஆனால் இப்போது நன்றாக இருக்கிறார். அவர் அடுத்த போட்டியில் விளையாடுவார்" என்று அவர் கூறினார்.
Thala Dhoni off 2 Lucknow 😍✈️#MSDhoni #Whistlepodu pic.twitter.com/xK8CGH0rah
— Chakri Dhoni (@ChakriDhoni17) April 17, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.