Sports - MS Dhoni Tamil News: வருகிற 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில், நாட்டின் பெயர் இந்தியா என்பதற்கு பதில் 'பாரத்' பாரத் என்ற பெயர் மாற்ற தீர்மானம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இதனிடையே, ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு 'பாரத்' குடியரசுத் தலைவர் என குறிப்பிட்ட அழைப்பிதழ் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதேபோல், 20வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 18வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டிற்காக பிரதமர் இந்தோனேசியாவிற்குச் சென்றது குறித்த அரசின் கையேட்டில் நரேந்திர மோடியை "பாரதத்தின் பிரதமர்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுவும் புதிய இதுவும் தற்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி 'பாரத்' பெயர் மாற்றத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் முகப்பு படத்தை மாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த இன்ஸ்டா டிபி-யில், 'பாரதியனாக இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன்' (I am Blessed to be a Bharatiya) என்ற வாசகம் உள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால் 75வது சுதந்திர தினத்தையொட்டி தோனி தனது இன்ஸ்டாகிராம் டிபி-யை மாற்றி இருந்தார். அது முதல் தற்போது வரை தோனி தனது டிபி-யை மாற்றாமல் வைத்துள்ளார். இந்த நிலையில், தோனியின் பழைய புகைப்படத்தை வைத்து, பாரத் பெயர் மாற்றத்திற்கு ஆதரவளிப்பதாக வதந்திகள் பரவி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“