/tamil-ie/media/media_files/uploads/2017/11/z886.jpg)
ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் உரி பகுதியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுடன், மகேந்திர சிங் தோனி கலந்துரையாடினார். இந்திய ராணுவத்தின் லெப்டினென்ட் கலோனலாக அப்பகுதிக்கு சென்ற தோனி, கிரிக்கெட் வீரர்களுக்கு பயனுள்ள டிப்ஸ்களை வழங்கினார். திறன்களை விட, முதலில் ஃபிட்டாக இருப்பது அவசியம் என லெப்டினென்ட் கலோனல் தோனி ஆலோசனை வழங்கினார்.
#Fitness first…..followed by skill says Lt Col (Hony) #Dhoni to budding cricketers of #Uri. Also gives valuable tips to youngsters. @msdhoni@adgpi@NorthernComd_IApic.twitter.com/ZIMirhQJ9U
— ChinarCorps.IA (@Chinarcorps_IA) 25 November 2017
இதுகுறித்து தோனி அவர்களிடம், "நான் பேட்மிண்டன் விளையாடுவேன், ஹாக்கி மற்றும் கால்பந்து கூட விளையாடுவேன். இந்த விளையாட்டுகளின் மூலம் நான் எனது உடலை எப்போதும் ஃபிட்டாக வைத்துக் கொண்டிருக்கிறேன். நீண்ட தூரம் ஓடினால், உடல் ஆரோக்யமாக இருக்கும். நான் கிரிக்கெட் விளையாட பழகிய காலத்தில், எங்களின் சீனியர்கள் விளையாடி முடிக்கும் வரை காத்திருந்து, அதற்கு பின் அந்த பெரிய மைதானத்தை சுற்றி ஓடுவோம். அந்தளவிற்கு பயிற்சி மேற்கொள்வோம்" என்றார்.
தோனியின் ஆலோசனைகளை கிரிக்கெட் வீரர்கள் மிகவும் ஆர்வமுடன் கேட்டறிந்து கொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.