New Update
/indian-express-tamil/media/media_files/3mI79MwUrRRNTN0My3rl.jpg)
பரம்ஜித் சிங் தோனியின் ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமானவராக இருந்தார். அவர் மூலம் தான் தோனிக்கு பேட் ஸ்பான்சர்ஷிப் கிடைத்தது.
/
பரம்ஜித் சிங் தோனியின் ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமானவராக இருந்தார். அவர் மூலம் தான் தோனிக்கு பேட் ஸ்பான்சர்ஷிப் கிடைத்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற கேப்டன்களுள் முக்கியமானவராக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி உள்ளார். அவரது தலைமையிலான இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என ஐ.சி.சி நடத்திய அனைத்து வடிவ போட்டிகளிலும் கோப்பைகளை வென்று சாதனையை படைத்துள்ளது.
இதேபோல், ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வாகை சூடியுள்ளது. தற்போது 42 வயதான தோனி இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறார். இந்த சீசன் தான் அவரது கடைசி சீசனாக இருக்கும் என ரசிகர்கள் பரபரப்பாக பேசியும் வருகிறார்கள்.
இந்நிலையில், ஐ.பி.எல் 2024 தொடருக்காக சி.எஸ்.கே கேப்டன் எம்.எஸ் தோனி தீவிரமாக தயாராகி வருகிறார். தற்போது அவர் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், வலைப் பயிற்சியின் போது தோனி பயன்படுத்திய புதிய பேட் ஸ்டிக்கர் சமூக ஊடகங்களில் தீயாக பரவி வருகிறது. அதற்குப் பின்னால் இருக்கும் கதை ரசிகர்களை நெகிழச் செய்துள்ளது.
தோனி ராஞ்சியில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட போது, அவரது பேட்டில் இருந்த ஸ்டிக்கர் ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றது. பேட்டில் பிரைம் ஸ்போர்ட்ஸ் என்ற ஸ்டிக்கரை கொண்டு தோனி விளையாடி வருகிறார். இது தோனியின் ஆரம்ப கால கிரிக்கெட் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த அவரின் நண்பர் பரம்ஜித் சிங்கின் விளையாட்டு நிறுவனத்தின் பெயராகும்.
பரம்ஜித் சிங் தோனியின் ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமானவராக இருந்தார். அவர் மூலம் தான் தோனிக்கு பேட் ஸ்பான்சர்ஷிப் கிடைத்தது. தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட "எம்எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி" படத்தில் கூட பரம்ஜித் சிங்கின் கதாபாத்திரம் முக்கிய பங்கு வகித்திருக்கும்.
விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் பரம்ஜித் சிங், தோனிக்கு ஸ்பான்சர்ஷிப் கிடைக்க தொடர்ந்து முயற்சிகளை செய்வார். தற்போது பரம்ஜித் சிங் நிறுவனத்தின் பேட்டையே தோனி பயன்படுத்தி வருவது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது கடைசி ஐ.பி.எல் தொடரில் களமிறங்கும் தோனி, தனது நண்பனுக்கு நன்றி கூறும் வகையில் பிரைம் ஸ்போர்ட்ஸ் ஸ்டிக்கருடன் கொண்டு பேட்டை பயன்படுத்துவார் என்று தெரிகிறது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
MS Dhoni with the 'Prime Sports' sticker bat. It is owned by his friend.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 7, 2024
MS thanking him for all his help during the early stage of his career. pic.twitter.com/sYtcGE6Qal
2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது தோனி பல்வேறு பிராண்ட்களை கொண்டு பேட்டை களத்தில் பயன்படுத்தினார். BAS, எஸ்எஸ், ஸ்பார்டன் என்று தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பேட் ஸ்பான்சர் செய்த அனைவருக்கும் நன்றி கூறும் வகையில் பல்வேறு பேட்களை பயன்படுத்தி இருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.