Advertisment

வெற்றிகரமாக முடிந்த முழங்கால் அறுவை சிகிச்சை: 'மீண்டும் களத்தில் மிரட்டுவார் தோனி' - சி.எஸ்.கே நிர்வாகம் நம்பிக்கை

சி.எஸ்.கே கேப்டன் தோனி இந்த சீசன் முழுவதும் முழங்கால் வலியுடன் விளையாடி வந்தார். பேட்டிங்கின் போது ரன் எடுக்க மிகவும் சிரமப்பட்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ms dhoni knee surgery, fit to play next IPL CSK management Tamil News

MS Dhoni CSK

Chennai Super Kings - MS Dhoni Tamil News: தோனிக்கு அவரது இடது முழங்காலில் அறுவை சிகிச்சை நடைபெற்று வெற்றிகரமாக நிறைவடைந்ததாக சென்னை அணியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

ஐ.பி.எல் 2023 தொடருக்கான இறுதிப்போட்டியில் ஹர்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது. அணியை திறம்பட வழிநடத்திய கேப்டன் தோனி இந்த சீசன் முழுவதும் முழங்கால் வலியுடன் விளையாடி வந்தார். பேட்டிங்கின் போது ரன் எடுக்க மிகவும் சிரமப்பட்டார்.

இந்நிலையில், மும்பை சென்ற தோனிக்கு அவரது இடது முழங்காலில் அறுவை சிகிச்சை நடைபெற்று வெற்றிகரமாக நிறைவடைந்ததாக சென்னை அணியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் பேசுகையில், "ஆமாம், தோனிக்கு மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை வெற்றிகரமாக முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் நலமாக இருக்கிறார். காலையில் அறுவை சிகிச்சை நடந்தது. இது தொடர்பான மேலதிக விவரங்கள் என்னிடம் இல்லை. அறுவை சிகிச்சை மற்றும் பிற விஷயங்கள் குறித்த இயல்பைப் பற்றிய அனைத்து விவரங்களையும் நான் இன்னும் பெறவில்லை." என்று கூறினார்.

publive-image

தோனி குறித்து சென்னை அணியின் அதிகாரி ஒரு பேசுகையில், "அவர் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அவரது விரிவான மறுவாழ்வு தொடங்குவதற்கு முன்பு அவர் சில நாட்கள் ஓய்வில் இருப்பார். அடுத்த ஐ.பி.எல்.-லில் விளையாடுவதற்கு அவருக்கு போதுமான நேரம் கிடைக்கும் என இப்போது எதிர்பார்க்கப்படுகிறது," என்று கூறினார்.

தோனி தற்போது காயத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில், அவர் முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொள்வது தொடர்பாக புகழ்பெற்ற விளையாட்டு எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் டின்ஷா பார்திவாலாவிடம் ஆலோசனை பெற்றார். டாக்டர் டின்ஷா பார்திவாலா பி.சி.சி.ஐ-யின் மருத்துவக் குழுவில் உள்ளார். மேலும் அவர் தான் ரிஷப் பண்ட் உள்ளிட்ட பல இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அறுவை சிகிச்சை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Cricket Sports Ms Dhoni Chennai Super Kings Ipl News Ipl Cricket Ipl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment