Advertisment

டி.வி-யில் பார்க்க ஈஸி, ஆனா... ஐ.பி.எல் 2023 வெற்றிக்கு ஜடேஜாவை புகழ்ந்த தோனி!

வெற்றியைக் களிப்பை கொண்டாடியபடி மைதானத்தை சுற்றி வந்த ஜடேஜாவை தோனி ஆரத்தழுவி கட்டியணைத்தார். போட்டியைப் பார்த்த ஒவ்வொரு சி.எஸ்.கே ரசிகரும் தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத தருணமாக இருந்தது.

author-image
WebDesk
New Update
MS Dhoni lauds Ravindra Jadeja for his last over heroics against GT in 2023 IPL final Tamil News

சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது களத்தில் இருந்த ரவீந்திர ஜடேஜா சிறப்பாக மட்டையைச் சுழற்றி அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Ipl Cricket | Ms Dhoni | Ravindra Jadeja | Chennai Super Kings: கடந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான  ஐ.பி.எல் 2023 (இந்தியன் பிரீமியர் லீக்) இறுதிப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டபோது, ​​ஜடேஜா ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாசி, சி.எஸ்.கே அணி 5வது சாம்பியன் பட்டத்தை வாகை சூட உதவினார். இந்த தருணத்தைப் பற்றி நேற்று வியாழக்கிழமை நடந்த தனியார் நிகழ்ச்சியில் தோனி நினைவுகூர்ந்தார். 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: MS Dhoni lauds Ravindra Jadeja for his last over heroics against GT in 2023 IPL final

ஜடேஜாவைப் பாராட்டிப் பேசிய தோனி, "இந்தச் சூழ்நிலையிலும், நான் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தேன் என்பது உங்களுக்குத் தெரியும், இலக்கை அடைவதற்கான திறமையும் மனநிலையும் ஜட்டுவுக்கு உண்டு. ஆனால் மீண்டும், இதுதான் நடக்கும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. அது மிகவும் மறக்கமுடியாத இன்னிங்ஸ். கடைசி பந்திற்கு முன்பு அவர் அடித்த சில சிக்ஸர்கள் உங்களுக்குத் தெரியும். அவை மிகவும் கடினமானவை.  

டி.வி-யில் பார்க்கும்போது, ​​அது எளிதாகத் தெரிகிறது. ஆனால் இப்போது லோ-ஆடரில் பேட்டிங் செய்யும் எனக்கு, அந்த மாதிரியான உயரத்தில் சிக்ஸர் அடித்து வெல்வதும் எவ்வளவு கடினம் என்று தெரியும். அதே நேரத்தில், எல்லோரும் அழுத்தத்தில் உள்ளனர். எதிரணியினர் வெற்றி பெற வேண்டும், நாங்கள் வெற்றி பெற வேண்டும். இது அனைவருக்கும் கடினமான ஒன்றாக இருந்தது. நாங்கள் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. மற்றும் உணர்ச்சிகள் மிக அதிகமாக இருந்தன. எனவே அவர் பேட்டிங் செய்த விதத்திற்காக ஜட்டுவுக்கு ஒரு பெரிய கைதட்டல் கொடுக்கலாம்" என்று முன்னாள் சி.எஸ்.கே கேப்டன் கூறினார்.

மே 2023 இல், மழையால் பாதிக்கப்பட்ட அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை எடுத்தது. அணிக்கு வலுவான தொடக்கம் கொடுத்து அதிரடியாக விளையாடிய சாய் சுதர்சன் 47 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 96 ரன்கள் எடுத்தார்.

மழை குறுக்கீட்டிற்குப் பிறகு, 15 ஓவர்களில் 171 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த ரவீந்திர ஜடேஜா சிறப்பாக மட்டையைச் சுழற்றி அணிக்கு வெற்றி தேடித் தந்தார். வெற்றியைக் களிப்பை கொண்டாடியபடி மைதானத்தை சுற்றி வந்த ஜடேஜாவை தோனி ஆரத்தழுவி கட்டியணைத்தார். போட்டியைப் பார்த்த ஒவ்வொரு சி.எஸ்.கே ரசிகரும் தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத தருணமாக இருந்தது. 

தற்போது ஐ.பி.எல் 2024 தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், போட்டிக்கு தொடங்க ஒரு நாளுக்கு முன்னர் சி.எஸ்.கே கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகினார். ருதுராஜ் கெய்க்வாட் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான சென்னை அணி இந்த சீசனில் விளையாடிய 2 ஆட்டங்களில் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ்) அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதும் 13வது லீக் போட்டி விசாகப்பட்டினத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Chennai Super Kings Ipl Cricket Ms Dhoni Ravindra Jadeja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment