MS Dhoni Loses His Cool At Matheesha Pathirana During Chennai Super Kings Loss Tamil News
IPL 2023 - RR vs CSK, MS Dhoni Matheesha Pathirana Tamil News: 10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் ஜெய்ப்பூரில் நடந்த நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 77 ரன்கள் எடுத்தார். சென்னை அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளையும், தீக்சனா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
Advertisment
தொடர்ந்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணி 20 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் அணியில் ஆடம் சாம்பா 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 32 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்று மீண்டும் புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.
களத்தில் தோனி கோபம்; பத்திரனா செய்தது என்ன?
சென்னை அணி இந்த சீசனில் வலுவான பேட்டிங்கை கொண்டுள்ளது. அதுபோக சென்னை அணியின் கேப்டன் தோனியின் கேப்டன்ஷிப் திறனும் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. களத்தில் அவர் எவ்வளவு பரபரப்பு இருந்தாலும் அதை எந்த வித டென்ஷனும் இன்றி 'கூல்' ஆக கையாள்வதற்கு பெயர் போனவர்.
Advertisment
Advertisement
ஆனால், நேற்றைய ஆட்டத்தின் போது களத்தில் தோனி கோபம் அடைந்தார். இந்த ஆட்டத்தில் வெறும் 15 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் அணியின் மிடில்-ஆர்டர் பேட்டர் துருவ் ஜூரெலை தோனி ஸ்டம்பிங் செய்தார். அதன்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஸ்ட்ரைக்கிற்கு வந்தார், அவர் படிக்கலிடம் ஸ்ட்ரைக் கொடுக்க விரைவான சிங்கிள் எடுத்தார். பின்னர் அவர் பத்திரன வீசிய பந்தை ஃபைன்-லெக்கில் பவுண்டரி அடித்தார்.
ராயல்ஸ் இன்னிங்ஸின் கடைசி பந்தில் பத்திரன 3 ரன்களை விட்டுக்கொடுத்தார். அந்த பந்தை எடுத்த ஷிவம் துபே கேப்டன் தோனியிடம் வீசினார். தோனிக்கு துபே வீசிய பந்தை பத்திரன இடைமறித்தார். இதனால், தோனி கடும் கோபமடைந்தார். அதோடு ஒரு மரண பார்வையையும் பார்த்தார். இது தொடர்பாக வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.