லக்னோவில் மாஸ் என்ட்ரி கொடுத்த தோனி... ஸ்மார்ட் வாட்ச் எச்சரிக்கையை பகிர்ந்த டி காக் மனைவி!

சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி பேட்டிங் செய்ய வந்தபோது, லக்னோவின் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர்.

சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி பேட்டிங் செய்ய வந்தபோது, லக்னோவின் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர்.

author-image
WebDesk
New Update
MS Dhoni mass entry in Lucknow Ekana Cricket Stadium Quinton de Kock wife Sasha Hurly Watch show warning Tamil News

லக்னோவின் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் எழுப்பிய சத்தம் ஷோர் மீட்டரில்' 124 டி.பி எனக் காட்டியது.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

MS Dhoni | Chennai Super Kings | Lucknow Super Giants | IPL 2024:17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு லக்னோவில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. 

Advertisment

இதில் டாஸ் வென்ற லக்னோ பவுலிங் வீசிய நிலையில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி  20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ரவீந்திர அரைசதம் அடித்த ஜடேஜா 57 ரன்களையும், ரஹானே 36 ரன்களையும், கடைசி கட்டத்தில் களமிறங்கிய அதிரடி காட்டிய தோனி 9 பந்துகளில் 28 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இதனையடுத்து, 177 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய லக்னோ அணி, 19 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் கேப்டன் கே.எல் ராகுல் 82 ரன்களும், குயின்டன் டி காக் 54 ரன்களும் எடுத்தனர். 

ஸ்மார்ட் வாட்ச் எச்சரிக்கையை பகிர்ந்த டி காக் மனைவி

இந்நிலையில், சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி பேட்டிங் செய்ய வந்தபோது, லக்னோவின் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர். அவர்கள் எழுப்பிய சத்தம் விண்ணை முட்டியது.  ஸ்டேடியத்தின் கூரைகளை கிழிக்கும் அளவுக்கு இருந்தது. இந்த நிலையில், ரசிகர்கள் எழுப்பிய சத்தம் ஷோர் மீட்டரில்' 124 டி.பி எனக் காட்டியது. 

Advertisment
Advertisements

இதேபோல், ரசிகர்கள் எழுப்பிய உற்சாக சத்தத்தையடுத்து, ஸ்மார்ட் வாட்ச்சில் பதிவான எச்சரிக்கையை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் லக்னோ வீரர் குயிண்டன் டி காக்கின் மனைவி ஷாஷா பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

இந்தப் போட்டியில் தோனி மொயீன் அலியின் விக்கெட்டுக்குப் பின் களம் புகுந்தார். அவருக்கு எப்போதும் போல் ஆரவாரமான வரவேற்பை கொடுத்தனர் ரசிகர்கள். 9 பந்துகளை எதிர்கொண்ட தோனி 3 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 28 ரன்கள் எடுத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Chennai Super Kings Ms Dhoni Lucknow Super Giants IPL 2024

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: