MS Dhoni Mother-In-Law Sheila Singh Net Worth Tamil News: உலக கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியை மிளிரச் செய்த இந்திய கேப்டன்களில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு முக்கிய இடம் உண்டு. அவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி நடத்திய 3 வகையான (ஐசிசி உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐசிசி டி20 உலகக் கோப்பை ) உலக கோப்பையையும் கைப்பற்றியது. மேலும் ஏனைய அணிகளால் பதிவு செய்யப்பட ரெக்கார்டுகளையும் தகர்த்தெறிந்துள்ளது.
கடந்த 2004 ஆம் ஆண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்திய அணியில் அறிமுகமாகிய தோனி 2019ம் ஆண்டோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்தார். சுமார் 16 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடிய அனுபவம் கொண்ட இவர் 90 டெஸ்ட், 350 ஒருநாள் மற்றும் 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், 15 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். தற்போது ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கேப்டனாக (2008ம் ஆண்டு முதல்) வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார். நடந்து முடிந்த 16வது ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது.
தோனி மாமியார் சொத்து மதிப்பு
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி கிரிக்கெட், விவசாயம், சினிமா என்று கலக்கி வருகிறார். உலக பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் ஒருவராகவும் இடம் பெற்றுள்ள அவரது சொத்து மதிப்பு ரூ.1040 கோடியாகும். சமீபத்தில், தோனி எண்டர்டெயிண்ட்மெண்ட் என்று தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தோனியின் மாமியார் ஷீலா சிங் நியமிக்கப்பட்டு உள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.800 கோடியை தாண்டியுள்ளது. இந்நிறுவனம் தமிழில் லெட்ஸ் கெட் மேரீடு (எல்ஜிஎம் LGM – Let’s Get Married) என்ற படத்தை தயாரித்து வருகிறது. தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) ஷீலா சிங் இருந்து வரும் நிலையில், முக்கிய பங்குதாரராக சாக்ஷி தோனி தான் இருக்கிறார்.
தோனியின் மாமியார் ஷீலா சிங் ஒரு ஹவுஸ் மேக்கர். அவரது கணவர், தோனியின் தந்தையுடன் பணியாற்றியவர் ஆவார். ஷிலா சிங்கின் கணவர் ஆர்கே சிங் மற்றும் தோனியின் தந்தை பான் சிங் இருவரும் ஆரம்ப காலகட்டத்தில் கனோய் குழுமத்தின் 'பினாகுரி தேயிலை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.