சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிவித்தார்.
டெஸ்ட் போட்டியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்ற தோனி, தற்போது அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில், " அனைத்து சூழ்நிலைகளிலும் நீங்கள் காட்டிய அன்புக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றிகள். இன்று மாலை 1929 (07.29) மணி முதல் நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாக கருதி கொள்ளுங்கள்" என்று மகேந்திர சிங் தோனி தெரிவித்தார்.
எம்.எஸ். தோனியின் தலைமையில் 2007 ஐசிசி உலக 20/20 கோப்பை போட்டி , 2010மற்றும் 2016 ஆசியக் கோப்பை, 2011 உலகக் கோப்பை மற்றும் 2013 ஐசிசி சேம்பியன்ஸ் கோப்பை ஆகிய கோப்பைகளை இந்திய அணி வென்றது.
இவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட எம். எஸ். தோனி திரைப்படம் மக்களை அதிகமாக கவர்ந்தது.
இந்த அறிவிப்பு, அவரின் கோடிகணக்கான ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டன் பதிவியில் இருந்து ஒய்வு பெறுவதாகஅறிவித்தார். அதன் பின், இந்திய அணியை வழிநடத்திய விராட் கோலிக்கு பக்கத் துணையாய் விளங்கினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil