IPL 2018 உத்தேசமாக இரு மாத கிரிக்கெட் திருவிழா முடிந்துவிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களைப் பொறுத்தவரை கொண்டாட்டமான முடிவு!
IPL 2018 மும்பையில் நடந்த இறுதிப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை ஊதித் தள்ளியது சி.எஸ்.கே.! ரெய்னா, அம்பதி ராயுடு, வாட்சன், தீபக் சாஹர், இங்கிடி என சில வீரர்கள் இந்தத் தொடரில் அசத்தினாலும், அனைத்திற்கும் மேலாக மகேந்திர சிங் டோனியின் கேப்டன்ஷிப் எப்போதும்போல பேசப்படுகிறது.
‘தந்தைகளின் அணி’, ‘வயதானவர்களின் அணி’ என பலவாறாக விமர்சிக்கப்பட்ட சி.எஸ்.கே., அந்த விமர்சனங்களை தவிடுபொடியாக்கிய ரகசியத்தை கோப்பையை வென்ற பிறகு டோனியே உடைத்திருக்கிறார். ‘ஒருவர் பிறந்த ஆண்டு முக்கியமல்ல. அவர் உடற் தகுதியுடன் இருக்கிறாரா? என்பதே முக்கியம். உதாரணத்திற்கு, 34 வயதான அம்பதி ராயுடு. மைதானத்தில் அதிக ஏரியாவை (பீல்டிங்கில்) அவர் கவர் செய்கிறார். அதுதான் தேவை’ என்றார் டோனி!
பிட்நெஸ்ஸில் அதிக அக்கறையை தங்கள் அணி காட்டியதை வெளிப்படையாக சொன்னார் டோனி. இறுதிப் போட்டியில் ஜெயித்து சாம்பியன் ஆனபிறகு ஒரு சுவாரசிய போட்டி! 3 ரன்கள் ஓடி எடுப்பதில் டோனிக்கும், பிராவோவுக்கும் இடையே ஒரு போட்டி!
When Thala challenged Champion for a three run dash, post the victory yesterday! Any guesses who wins it? #whistlepodu #SuperChampions ???????? pic.twitter.com/k8OzIPMyxo
— Chennai Super Kings (@ChennaiIPL) 28 May 2018
பிராவோவின் பிட்நெஸைப் பற்றி யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மேற்கு இந்திய தீவு வீரரான அவர், இயல்பாகவே ஒரு ‘அத்லெட்’! பலரும் விழுந்து பிடிக்கிற கேட்சை, அசால்ட்டாக ஓடுகிற வேகத்திலேயே பிடித்துக்கொண்டு ஓடக்கூடியவர்! தவிர, 36 வயதான டோனியைவிட இரண்டு வயது இளையவர் பிராவோ!
இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் ஓடினாலும், இறுதியில் டோனியின் ‘பேட்’தான் ஓரிரு வினாடிகள் முன்னதாக கிரீஸுக்குள் வந்து சேருகிறது. இந்த வீடியோ காட்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.
சாம்பியன்களின் வெற்றி ரகசியம், ‘ஃபிட்நெஸ்’தான் என்பது புரிகிறதா?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.