/tamil-ie/media/media_files/uploads/2020/07/a17.jpg)
ms dhoni, dhoni, dhoni during pandemic, dhoni birthday, ms dhoni birthday, dhoni retirement, cricket news, தோனி, கிரிக்கெட் செய்திகள், விளையாட்டு செய்திகள்
மகேந்திர சிங் தோனி, கொரோன வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் எந்தவொரு வணிக ஒப்புதலும் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார், அதற்கு பதிலாக ஆர்கானிக் விவசாயம் மீது கவனம் செலுத்தி வருகிறார்.
2019 உலகக் கோப்பையிலிருந்து கிரிக்கெட்டில் இருந்து தொடர்ந்து ஓய்வில் இருக்கும் தல தோனி, ஐபிஎல் 2020 தொடரில் விளையாடுவதில் மிக ஆர்வமாக இருந்தார். ரசிகர்களும் தோனியின் கம்பேக் தரிசனத்தை காண பேராவலுடன் வெயிட்டிங்கில் இருக்க, கொரோனா அத்தனைக்கும் ஆப்பு வைத்தது. ராஞ்சியில் ஓய்வில் இருக்கும் தோனி, இப்போது தனது சொந்த தயாரிப்பான, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற உரங்களை விரைவில் வெளியிட தயாராகி வருகிறார்.
2, 2020#Thala Dhoni meets Raja Sir in his newest beast! ???? #HBDIlayaraja#WhistlePodupic.twitter.com/dNQv0KnTdP
— Chennai Super Kings (@ChennaiIPL)
#Thala Dhoni meets Raja Sir in his newest beast! ???? #HBDIlayaraja#WhistlePodupic.twitter.com/dNQv0KnTdP
— Chennai Super Kings (@ChennaiIPL) June 2, 2020
இதுகுறித்து தோனியின் மேலாளரும், அவரது குழந்தை பருவம் முதல் நண்பராக உள்ள மிஹிர் திவாகர் பி.டி.ஐ.யிடம் பேசுகையில், "தேசபக்தி அவரது இரத்தத்தில் உள்ளது, அது நாட்டிற்காக (ராணுவம்) அல்லது (விவசாயம்) என்று எதுவாக இருந்தாலும், அவர் அதில் முழு அர்ப்பணிப்போடு ஈடுபடுவார். தன்னிடம் உள்ள சுமார் 40-50 ஏக்கர் விளைநிலங்களில் பப்பாளி, வாழைப்பழம் போன்ற ஆர்கானிக் பயிர்களை வளர்ப்பதில் அவர் மும்முரமாக உள்ளார்" என்றார்.
'தல' பிறந்தநாளுக்கு தளபதி பாடல் - அதுவும் அனிருத் பெர்மிஷனோடு (வைரல் வீடியோ)
"நாங்கள் நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் குழுவைக் கொண்டுள்ளோம், அவர்கள் உரத்தை உருவாக்கியுள்ளனர், இது இரண்டு-மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டுவிடும்" என்று திவாகர் கூறினார்.
மேலும், தோனியின் பிறந்தநாள் குறித்து பேசிய திவாகர், "நான் அவருடன் நள்ளிரவுபேசினேன். இது ஒரு சாதாரண வணிகப் பேச்சு தான். வழக்கம் போல், தோனி தனது குடும்பத்தினருடன் வீட்டில் அமைதியாக பிறந்தநாள் கொண்டாடினார்" என்றார்.
நியோ குளோபலுடன் இணைந்து தோனி அவரின் ஆர்கானிக் உரங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக திவாகர் கூறினார்.
தோனியின் பண்ணையில் உரம் சோதிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.