பாகிஸ்தான் வீரருக்கு ஜெர்சி அன்பளிப்பு… தோனியை கொண்டாடும் ரசிகர்கள்!

MS Dhoni gifts his signed CSK jersey to Pakistan fast bowler Haris Rauf Tamil News: பாகிஸ்தான் வீரருக்கு தோனி தனது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சியை பரிசளித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கொண்டாப்பட்டு வருகிறது.

MS Dhoni Tamil News: Dhoni Sends his csk jersey to Pakistan Pacer Haris Rauf

Cricket news in tamil: அரசியல், பூலோக ரீதியாக மட்டுமல்லாமல் கிரிக்கெட்டிலும் பரம எதிரிகளாக இந்தியா – பாகிஸ்தான் அணிகள் உள்ளன. எனினும், இந்திய வீரர்களை பாகிஸ்தான் ரசிகர்களுக்கு அவ்வளவு பிடிக்கும். அதிலும் குறிப்பாக சச்சின், சேவாக், டிராவிட், கங்குலி, தோனி, கோலி போன்ற இந்திய வீரர்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

சமீபத்தில் நடந்த முடிந்த டி20 உலக்கோப்பை தொடரின் போது கூட இந்திய வீரர்களுடன் பாகிஸ்தான் வீரர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டதை நம்மால் பார்க்க முடிந்தது. குறிப்பாக இந்திய அணியின் வழிகாட்டியாக இருந்த தோனியிடனும், கேப்டன் கோலியுடனும் பல வீரர்கள் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். இதில் சிலர் நாங்கள் இந்த இரு ஜாம்பவான் வீரர்களின் ரசிகர்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

அந்த வகையில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராவுஃப் எம்.எஸ் தோனியின் மிகப்பெரிய ரசிகராம். அவரது போஸ்டரை தனது வீடெங்கும் ஒட்டும் அளவிற்கு பைத்தியமாம். இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் (சி.எஸ்.கே.) மேனஜர் ரஸில் மூலமாக தோனிக்கு தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹரிஸ் ராவுஃப்

இந்நிலையில், தனது அன்பு ரசிகருக்கு அற்புத பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் தோனி. அது என்ன பரிசு என்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சி தான் அது. தனது பெயர் மற்றும் எண் பொறித்த அந்த ஜெர்சியில் தனது கையப்பமிட்டு அனுப்பி வைத்துள்ளார் தோனி.

பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹரிஸ் ராவுஃப்

இதனை சற்றும் எதிர்பாராத ஹரிஸ் ராவுஃப், மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளிக் குதித்துள்ளார். இந்த மகிழ்ச்சி தருணத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தும் உள்ளார். அந்த பதிவில் ராவுஃப், “கிரிக்கெட் ஜாம்பவானும், கேப்டன் கூலும், இந்த ஜெர்சியை அனுப்பி எனக்கு கௌரவத்தை கொடுத்துள்ளார். இந்த ஜெர்சி எண் ‘7’ பல கோடி இதயங்களை வென்று வருகிறது. ரஸலுக்கு எனது சிறப்பு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அன்பான ஆதரவிற்கு மிக்க நன்றி.” என்று குறிப்பிட்டுள்ளார்

பாகிஸ்தான் அணிக்காக கடந்த 2020ம் ஆண்டில் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராவுஃப் (28) சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 14 விக்கெட்டுகளும், 34 டி20 போட்டிகளில் விளையாடி 41 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் கூட நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹரிஸ் ராவுஃப்

இந்நிலையில், பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ராவுஃப்-க்கு இந்திய ஜாம்பவான் வீரர் தோனி தனது ஜெர்சியை பரிசளித்தது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கொண்டாப்பட்டு வருகிறது. மேலும், ராவுஃப் சர்வதேச கிரிக்கெட் சிறப்பாக செயல்பட வேண்டும் எனக்கூறி அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

எம்.எஸ் தோனி – ஹரிஸ் ராவுஃப்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ms dhoni tamil news dhoni sends his csk jersey to pakistan pacer haris rauf

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express