சக வீரருக்காக தரையில் உறங்கிய தோனி… நெகிழ்வுடன் நினைவுகூர்ந்த ஹர்திக் பாண்டியா…!

India’s all-rounder cricketer Hardik Pandya revealed that Dhoni ‘doesn’t sleep on a bed’ Tamil News: பெருந்தன்மை மிக்க இந்திய வீரர்களில் தோனிக்கு தனி இடம் ஒதுக்கலாம். அந்த அளவிற்கு இளகிய மனமுடையவர்.

MS Dhoni Tamil News: Hardik reveals magnanimity of msd

Cricket news tamil: சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியை மிளிரச் செய்த இந்திய கேப்டன்களில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி முக்கியமானவர். இவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி நடத்திய 3 வகையான உலக கோப்பையையும் கைப்பற்றியுள்ளது. மேலும் ஏனைய அணிகளால் பதிவு செய்யப்பட பதிவுகளையும் தகர்த்தெறிந்துள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்திய அணியில் அறிமுகமாகிய தோனி 2019ம் ஆண்டோடு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்தார். சுமார் 16 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடிய அனுபவம் கொண்ட இவர் 90 டெஸ்ட், 350 ஒருநாள் மற்றும் 98 டி20 போட்டிகளில் விளையாடி, பல சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார்.

தற்போது ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றிகரமாக வழிநடத்தி வரும் இவர், அந்த அணி 4 முறை சாம்பியன் பட்டம் வாகை சூட காரணமாகவும் இருந்துள்ளார். கேப்டனாக இவரின் ஆளுமையையும், களத்தில் கூலாக இருந்து சாதிக்கும் இவரின் திறமையையும் பார்த்து இவருக்கு உலகம் முழுதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். மேலும் கிரிக்கெட் அணிகளில் விளையாடும் சில வீரர்கள் இவரை ஒரு முன்னுதாரணமாகவும் கருதி வருகின்றனர்.

என்னதான் தோனியைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதி வைத்து புகழ்ந்தாலும், அவர் களத்தில் எப்படி கூலாகவும், ‘டவுன்-டு எர்த்’ ஆளுமையாகவும் உள்ளாரோ அதைப்போலத்தான் வெளியிலும் இருப்பார். மேலும், பெருந்தன்மை மிக்க இந்திய வீரர்களில் இவருக்கு என தனி இடம் ஒதுக்கலாம். அந்த அளவிற்கு இளகிய மனமுடையவர் தோனி.

அவருடைய பெருந்தன்மைக்கு பல நிகழ்வுகள் உள்ளன. இதில் ஒரு நிகழ்வை, இந்திய ஆல்ரவுண்டரும் தோனியின் முன்னாள் சக வீரருமான ஹர்திக் பாண்டியா சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

அது என்ன நிகழ்வு என்றால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ‘காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் தோன்றிய ஹர்திக் பாண்டியா பெண்கள் குறித்து பேசிய இருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பவே, அவரை பிசிசிஐ நிர்வாகம் அணியில் இருந்து இடைநீக்கம் செய்திருந்தது. பிறகு, அவரே முன்வந்து மன்னிப்பு கேட்டதால், அணியில் சேர்க்கப்பட்டு நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு சற்று தாமதமாக சென்றார்.

இதனால் அவருக்கு ரூம் ஒதுக்கப்படவில்லை. அந்த நேரத்தில் தான் தங்கியிருந்த ரூம்மில் பாண்டியாவை தங்கிக் கொள்ள கூறியுள்ளார் தோனி. மேலும், தனது படுக்கையை பாண்டியாவுக்கு அளித்துவிட்டு தரையில் உறங்கியுள்ளார்.

இந்த நிகழ்வை ESPNCricinfo இணையதளம் உடனான உரையாடலின் போது நினைவுகூர்ந்த பாண்டியா, “என்னை ஆரம்பத்திலிருந்தே புரிந்துகொண்டவர்களில் எம்.எஸ் தோனி மிக முக்கியமானவர். நான் எப்படி செயல்படுகிறேன், நான் எப்படிப்பட்டவன், எனக்குப் பிடிக்காத விஷயங்கள், எல்லாவற்றையும் அவர் புரிந்து வைத்திருந்தார்.

நியூசிலாந்து தொடருக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டபோது (ஜனவரி 2019ல், இடைநீக்கம் திரும்பப் பெற்ற பிறகு), ஆரம்பத்தில் ஹோட்டல் அறைகள் எதுவும் இல்லை. ஆனால் எனக்கு அப்போது ஒரு அழைப்பு வந்தது, அதில், ‘உங்களை எம்.எஸ் தோனி வரச் சொல்கிறார்’ என்றார்கள். மேலும், ‘பொதுவாக அவர் படுக்கையில் உறங்குவது இல்லையாம். எனவே உங்களை அவரது படுக்கையை எடுத்துக்கொள்ள சொல்லிவிட்டார். அவர் தரையில் தூங்கிக் கொள்வதாக கூறிவிட்டார்’ என்றார்கள். இது எனக்கு மகிழ்ச்சி அளித்ததை விட ஒரு அதிர்ச்சியாகவே நான் உணர்ந்தேன். அவரின் பெருந்தன்மையை கண்டு நான் மெச்சினேன்.” என்று கூறி நெகிழ்ந்துள்ளார் ஹர்திக் பாண்டியா.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ms dhoni tamil news hardik reveals magnanimity of msd

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com