New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/11/z814.jpg)
தற்போது இந்திய அணி இலங்கைக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. நாளை முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது.
நம்ம தல தோனி எந்தளவுக்கு பைக் பிரியரோ, அதே அளவுக்கு செல்லப் பிராணிகளை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டுபவர். தனது இல்லத்தில் நாய்கள், பூனைகள் என பலவற்றை தோனி வளர்த்து வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்றுவிட்டதால், இந்தியா டெஸ்ட் தொடர்கள் விளையாடும் போதெல்லாம், தோனிக்கு விடுமுறை தான். அப்போது, நண்பர்களுடன் பொழுதை கழிப்பதிலும், வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுடன் நேரத்தை கடத்துவதும் தோனிக்கு பிடித்த விஷயங்கள்.
தற்போது இந்திய அணி இலங்கைக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. நாளை முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்த நிலையில், ராஞ்சியில் உள்ள தன் பண்ணை வீட்டில் இருக்கும் நாய்களுக்கு வளையங்களுக்குள் பாயும் பயிற்சியை தோனி அளிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனை தோனியே தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ஒரு தேர்ந்த பயிற்சியாளரை போல, தனது செல்ல நாய்களுக்கு இந்தப் பயிற்சியினை அவர் அளிக்கிறார். வீடியோ இதோ,
ZOYA(Dutch shepherd) does some training and LILY(husky) does the cheering job
A post shared by @mahi7781 on
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.