Ms Dhoni | Chennai Super Kings | IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த 22 ஆம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு விசாகப்பட்டினத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இருப்பினும், சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடைசி நேரத்தில் களமிறங்கி 16 பந்துகளில் 3 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 37 ரன்கள் எடுத்தார். அவரது இந்த அதிரடியான ஆட்டம் சென்னை அணி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. தனது ஹேர் ஸ்டைலை மாற்றி விட்டு ஏற்கனவே வின்டேஜ் தோனியாக களமாடி வரும் அவர் , பேட்டிங்கிலும் 'வின்டேஜ் தோனி' உணர்ச்சியை கொடுத்தார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: MS Dhoni: What was that thing strapped on CSK star’s ankle after Delhi game?
தோனிக்கு மீண்டும் காயமா?
இந்நிலையில், சமூக ஊடகங்களில் வைரலாகிவரும் வீடியோவில், எம்.எஸ் தோனி தனது கணுக்காலில் ஐஸ் பேக் (ஐஸ் கட்டி நிறைந்த பை) கட்டியிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள், தோனி மீண்டும் காயத்தால் அவதிப்படுகிறாரா? என்கிற கேள்வியை எழுப்பி வருகிறார்கள். மேலும், இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், தோனி சில இளைஞர்களுடன் பேசுவதைக் காணலாம். பின்னர் அவர் டாக்டர் ஒய்.எஸ் ராஜசேகர ரெட்டி ஏ.சி.ஏ-வி.டி.சி.ஏ கிரிக்கெட் ஸ்டேடியத்தின் மைதான ஊழியர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.
டெல்லி ஆட்டத்திற்குப் பிறகு சி.எஸ்.கே வெளியிட்ட மற்றொரு வீடியோவில் தோனி, 'இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு பரிசு' என்று கூறுகிறார். அதன்பிறகு, அவர் தாங்கித் தாங்கி நடந்தபடி ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு செல்கிறார். இந்த வீடியோ சென்னை அணி ரசிகர்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள், 'தல' தோனிக்கு இன்னும் முழங்கால் பிரச்சனை இருக்கிறது. இருப்பினும் அவர் ரசிகர்களுக்காக விளையாடி வருகிறார் என்றும், தோனி விரைவில் குணமடைந்துவிடுவார் என்றும் குறிப்பிட்டு வருகிறாரக்ள். மற்றொரு ரசிகர், "இது முழங்கால் பிரச்சினை அல்ல. வெறும் தசைப்பிடிப்பு தான்" என்றும், "வெள்ளிக்கிழமை வரை அவர் சிறிது ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.
தோனிக்கு கடந்த சீசனின் போது இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதற்காக அவர் மும்பையில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“