2021 ஐ.பி.எல் தொடரில் தோனி: ரசிகர்கள் உற்சாகம்

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர், வழக்கம் போல் ஏப்ரல்-மே காலகட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர், வழக்கம் போல் ஏப்ரல்-மே காலகட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
2021 ஐ.பி.எல் தொடரில் தோனி:  ரசிகர்கள் உற்சாகம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங்  தோனி அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் இந்தியன் பிரீமியர் லீக்  (ஐ.பி.எல்)  தொடரில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.

Advertisment

அபுதாபியில் நடைபெற்ற ஐ பி எல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த ஐ. பி. எல் தொடரில், பிளே ஆஃப் வாய்ப்பை நழுவ விட்டது. 13 போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே வெறும் ஐந்து போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இறுதி ஆட்டம் இதுவாகும்.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் ஜெயித்த தோனியிடம்     வர்ணனையாளர் டேனி மோரிசன், “இது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக நீங்கள் விளையாடும் கடைசி ஆட்டமாக இருக்குமா?” என்று கேட்டார்.

Advertisment
Advertisements

 

இதற்கு, "நிச்சயமாக இல்லை," என்று தோனி உடனடியாக பதிலளித்தார்.

 

எதிர்பார்த்தபடி, தோனியின் இந்த பதில் சமூக ஊடகங்களில் வெறித்தனமாக பகிரப்பட்டது.

 

 

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் வழக்கம் போல் ஏப்ரல்-மே காலகட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும்,  உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று  காரணமாக தேதிகள் மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mahendra Singh Dhoni

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: