இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.
அபுதாபியில் நடைபெற்ற ஐ பி எல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த ஐ. பி. எல் தொடரில், பிளே ஆஃப் வாய்ப்பை நழுவ விட்டது. 13 போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே வெறும் ஐந்து போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இறுதி ஆட்டம் இதுவாகும்.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் ஜெயித்த தோனியிடம் வர்ணனையாளர் டேனி மோரிசன், “இது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக நீங்கள் விளையாடும் கடைசி ஆட்டமாக இருக்குமா?” என்று கேட்டார்.
Danny Morrison : Could this be your last game in yellow ? #MSDhoni : Definitely Not!#CSK have won the toss and they will bowl first against #KXIP in Match 53 of #Dream11IPL pic.twitter.com/KhaDJFcApe
— IndianPremierLeague (@IPL) November 1, 2020
இதற்கு, “நிச்சயமாக இல்லை,” என்று தோனி உடனடியாக பதிலளித்தார்.
“We’ll come back strong, that’s what we are known for.” ???????? #WhistlePodu #Yellove pic.twitter.com/tCRmfDcTCZ
— Chennai Super Kings (@ChennaiIPL) November 1, 2020
எதிர்பார்த்தபடி, தோனியின் இந்த பதில் சமூக ஊடகங்களில் வெறித்தனமாக பகிரப்பட்டது.
Remember the words “Definitely Not”
Danny Morrison : Could this be your last game in yellow ? #MSDhoni : Definitely Not!#CSK #Dream11IPL #Mahi #Dhoni#Dhoniforever @Farhana_kanwal_ @zameehakhanam_ @Kd_278 pic.twitter.com/aXqsPy37Ae
— SAM (@samqdn) November 1, 2020
No matter what and where, we’ve always got your back Mahi♡#Dhoni #MSDhoni #Mahi #ThalaDhoni #DefinitelyNot #Dhoniforever pic.twitter.com/nrrGCh4ScR
— smriti ♡’s kash (ia) (@haloxmendes) November 1, 2020
We will Have to wait for The Next Year IPL To see Dhoni Again on the Cricket Field ????. #MSDhoni #CSK
” MSDIAN FOR LIFE ” ???? pic.twitter.com/FosYBP8rkp
— RITIK_MSD (@Msdhoni_Ritik) November 1, 2020
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் வழக்கம் போல் ஏப்ரல்-மே காலகட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக தேதிகள் மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.