/tamil-ie/media/media_files/uploads/2018/05/dhoni-ziva-viral-video.jpg)
ms dhoni, ziva video
‘தல’ டோனிக்கு வயதாகிவிட்டது என பலரும் விமர்சித்தனர். ஆனால் நாளுக்கு நாள் அவரது ‘எனர்ஜி’ கூடுவதன் ரகசியம் இந்த விடியோவைப் பார்த்தால் உங்களுக்கு புரியும்!
‘தல’ டோனியின் ஃபினிஷிங் சிக்சருடன் அவரது ரசிகர்களின் கொண்டாட்டம் நின்று விடுவதில்லை. டோனி ‘ஆஃப் தி கிரவுண்ட்’-ல் அவரது மகள் ‘ஸிவா’வுடன் ‘விளையாடுவது’ம் ரசிகர்களுக்கு என்டெர்டெயின்மென்ட்தான்!
டோனியின் மகள் ஸிவா தனது தந்தையுடன் விளையாடும் வீடியோ ஒன்று இப்போது செமையாக வைரல் ஆகியிருக்கிறது. கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சிக்கு இடையே டோனி சில நிமிடங்களை தந்து மகளுடன் செலவு செய்கிறார். அந்தத் தருணத்தில் ஸிவா-வை, டோனியின் தொப்பியில் இடம் பெற்றிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் ‘லோகோ’வான சிங்கம் கவர்ந்து விடுகிறது.
உடனே டோனியின் தலையில் இருக்கும் தொப்பியை எட்டிப் பிடித்து கையில் எடுக்கிறாள், சின்னப் பெண் ஸிவா. பிறகு மீண்டும் டோனியின் தலையில் அந்தத் தொப்பியை அணிவிக்க முயற்சிக்கிறாள். தொடர்ந்து உற்சாகம் பொங்க மைதானத்தில் குதிகுதியென குதிக்கிறாள் ஸிவா!
@msdhoni Thala having some fun with ziva #WhistlePodupic.twitter.com/ze2MwEQoM0
— Chennai Super Kings (@ChennaiIPL) 20 May 2018
சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருக்கிறது. டோனியின் ரசிகர்களால் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ வைரல் ஆகி, ஸிவாவை ‘இண்டர்நெட் டார்லிங்’ ஆக்கியிருக்கிறது. பார்க்கிறவர்களுக்கே உற்சாகத்தை அள்ளித் தரும் இந்தக் காட்சிகள், ‘தல’ டோனிக்கும் எனர்ஜி டானிக்காக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
When the entire stadium cheers for your dad! #whistlepodu#thala#yellove#CSKvKXIP ???????? pic.twitter.com/HcmIWninFh
— Chennai Super Kings (@ChennaiIPL) 20 May 2018
இப்போ புரியுதா, நாளுக்கு நாள் டோனியின் ஆட்டம் மெருகேறுவதன் ரகசியம்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us