இந்தியா – இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியின் வெற்றியை, கேப்டன் தோனியின் செல்ல மகள் ஜிவா டான்ஸ் ஆடி கொண்டாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இங்கிலாந்து அணிகள் மோதிய இறுதி டி20 போட்டி இங்கிலாந்தின் பிரிஸ்டல் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
இந்திய வீரர்களின் ஆட்டத்தைக் காண தோனியின் மனைவி சாக்ஷி தோனி, மகள் ஜிவாவுடன் வந்திருந்தார். இவர்களுடன் விராட் கோலியின் மனைவியும், பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் அமர்ந்து போட்டியைக் கண்டுகொண்டிருந்தனர்.
இங்கிலாந்து அணி நிர்ணயித்த 198 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை, அதிரடியாக ஆடி சேஸ் செய்து இந்திய அணி அபார வெற்றி பெற்று டி20 தொடரைக் கைப்பற்றியது. இதில் மிரட்டலாக செயல்பட்ட விக்கெட் கீப்பர் தோனி 5 கேட்சுகளும், ஒரு ரன் அவுட்டும் செய்தார்.
இதையடுத்து, கோப்பையை விராட் கோலி பெறுகையில் இந்திய வீரர்கள் மகிழ்ச்சியில் கொண்டாட, பவுண்டரி லைனுக்கு அருகே நின்று கொண்டிருந்த ஜிவா தோனி துள்ளி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.