இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எத்தனையோ கேப்டன்கள் இருந்திருக்கலாம், ஆனால் மகேந்திர சிங் தோனி அவர்களிடமிருந்து சற்றே வித்தியாசப்பட்டிருக்கிறார்.
காரணம், எவ்வளவு இக்கட்டான நெருக்கடியிலும் நிலை தடுமாறாது, கூலான முடிவெடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் சிறப்பான ஆளுமை அவர்.
ஐ.பி.எல் சீசன் துவங்கப் பட்டதிலிருந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார். தனது அனைத்து கேப்டன் பதவிகளில் இருந்து விலகி விட்டாலும், ஒட்டு மொத்த ரசிகர்களும் அவரை ‘கேப்டன் கூல்’ என்று தான் அன்போடு அழைக்கிறார்கள்.
சென்னை அணி சர்ச்சையில் சிக்கி, தடையில் இருந்தபோது மட்டும் புனே அணிக்காக விளையாடினார் தோனி. தடை முடிந்து மீண்டும் களத்துக்கு திரும்பிய தனது அணியையும், சென்னை ரசிகர்களையும் மகிழ்விக்கும் விதமாக கடந்தாண்டு கோப்பையை வென்று கொடுத்தார்.
சென்னை எனக்கு இரண்டாவது தாய்வீடு என்று அடிக்கடி சொல்லும் தோனி, ரசிகர்களையும் மகிழ்விக்க மறப்பதில்லை.
இந்நிலையில் நேற்று கொல்கத்தாவுடன் நடந்த மேட்சிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தில் உள்ளது.
View this post on Instagram
After getting used to IPL timing this is what happens if u have a morning flight
A post shared by M S Dhoni (@mahi7781) on
இதற்கிடையே தோனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார். “ஐ.பி.எல் சமயங்களில் மேட்ச் முடிந்ததும் காலையில் ஃப்ளைட் இருந்தால் இதுதான் நடக்கும்” என்ற கேப்ஷனுடன் அந்த ஃபோட்டோவை அவர் ஷேர் செய்துள்ளார்.
அதாவது ஃப்ளைட்டுக்குக் கிளம்பியவாறு, சென்னை ஏர்போர்ட்டில் பையை தலைக்கு வைத்து கீழே வெறும் தரையில் படுத்துக் தூங்குகிறார் தோனி. அதே பையில் மறுபுறம் தலையை வைத்துத் தூங்குகிறார் சாக்ஷி தோனி.
பக்கத்தில் மற்ற வீரர்கள் தங்களது மூட்டை முடிச்சுகளுடன் அமர்ந்திருக்கிறார்கள்.
இந்த படத்தைப் பகிர்ந்த 45 நிமிடத்துக்குள் ஐந்தரை லட்சத்துக்கும் அதிகமானவர்கள் லைக் செய்திருக்கிறார்கள்.
அதில் தோனியின் எளிமையைக் கண்டு வியந்திருக்கும் ரசிகர்கள், தங்களது அன்பு மழையப் பொழிந்து வருகிறார்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.