உயிருக்கு ஆபத்து இருப்பதால் துப்பாக்கி உரிமம் வேண்டும்: தோனியின் மனைவி சாக்‌ஷி!

தனக்கு தாமதம் இன்றி துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமம் வழங்கவேண்டும்

முன்னாள் கேப்டன் தோனியின் மனைவி சாக்‌ஷி உயிருக்கு ஆபத்து இருப்பதால் துப்பாக்கி உரிமம் கோரி உள்துறை அமைச்சகத்தில் விண்ணப்பித்துள்ளார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சாக்‌ஷியை கடந்த 2010 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஜிவா என்ற அழகிய மகளும் உள்ளார். தோனியின் ரசிகர்கள் அனைவரும் அவரின் செல்ல மகள் ஜிவாவிற்கும் ஃபேன்ஸ். ஜிவா விளையாடுவது, பேசுவது, பாடுவது என அவர் எதை செய்தாலும் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆக்கிவிடுவார்கள்.

இந்த குடும்பத்திற்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ் பட்டாளம் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியாவில் வலம் வந்துக் கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. கடந்த 2008-ம் ஆண்டு தோனி துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டிய விண்ணப்பித்திருந்தார். அவரிடம் பல்வேறு விசாரணை நடத்தப்பட்டு பின்பு, உரிமம் வழங்கப்பட்டது.

தற்போது தோனி, 9 எம்எம் ரக பிஸ்டலுக்கான உரிமம் பெற்று பயன்படுத்தி வருகிறார். இதனையடுத்து தோனியின் மனைவி சாக்‌ஷியும், தற்போது துப்பாக்கி உரிமம் கோரி உள்துறை அமைச்சகத்தில் விண்ணப்பித்துள்ளார். அதற்கான மனுவில் சாக்‌ஷி கூறியிருப்பது, “ எனது உயிருக்கு அதிகளவு ஆபத்து உள்ளது.பாதுகாப்பு அச்சுறுத்தலும் இருக்கிறது. தனிப்பட்ட வேலைகளுக்காக வெளியில் சென்றால் கூட, தான் தனிமையில் இருப்பதால், தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. இதனால் தனக்கு தாமதம் இன்றி துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமம் வழங்கவேண்டும்” என்று கூறிபிட்டுள்ளார். மேலும், 0.32 ரக ரிவால்வர் அல்லது சிறிய ரக பிஸ்டல் துப்பாக்கிக்கான உரிமம் வழங்க வேண்டும் என்றும் சாக்‌ஷி தெரிவித்துள்ளார்.

தோனியின் ரசிகர்களுக்கா இதோ இந்த வீடியோ…

பேட்டிங்கில் கலக்கும் தோனி சென்ற வருடம் கொல்கத்தாவில் போலீஸ் ட்ரெயினிங் ஸ்கூலில் துப்பாக்கிச் சூடும் போது எடுக்கப்பட்டது..

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close