Advertisment

முடி முதல் நடை வரை; அக்தரை போல் பவுலிங்... ஓமன் கிரிக்கெட் அணியில் கலக்கும் எலக்ட்ரீஷியன் இம்ரான்!

இம்ரான் அச்சடித்தார் போல் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என புகழப்படும் அக்தரைப் போலவே முடி முதல் நடை வரை அவரது பந்துவீச்சு குறி, ரன்-அப், லோட்-அப் மற்றும் கொண்டாட்டம் என அப்படியே இருக்கிறார்.

author-image
WebDesk
New Update
Muhammad Imran  |  Oman cricket team

'பாகிஸ்தான் கிரிக்கெட்டில் உள்ள அரசியல் உங்களுக்குத் தெரியும், அமைப்பில் உள்ளவர்களை உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் அதற்கு மேல் செல்ல முடியாது, ”என்று இம்ரான் குற்றம் சாட்டினார்.

முஹம்மது இம்ரானின் கதை மிகவும் விசித்திரமான ஒன்றாகும். இது சமூக வலைதளங்களில் வைரலாவதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. 

Advertisment

2012 ஆம் ஆண்டில், டிசம்பர் குளிர் இரவில், 18 வயதில், இம்ரான் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்தை யாருக்கும் தெரிவிக்காமல், 1,000 கிமீ தூரம் டிரக்கில் கராச்சிக்கு பயணம் செய்தார். பயணத்தின் நோக்கம் முயற்சியை திருவினைக்கத்தான். கிரிக்கெட்டை தொடராமல் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர வேண்டும் என்று அவரது தந்தை விரும்பியதால் குடும்பத்தில் யாரிடமும் சொல்லாமல் அவர் ஓடி சென்றார். 

இப்போது 10 ஆண்டுகளுக்கு மேலாக, முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரை போல் அவரது வினோதமான பந்துவீச்சு ஒற்றுமையின் காரணமாக, அவரது பந்துவீச்சு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இம்ரான் அச்சடித்தார் போல் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என புகழப்படும் அக்தரைப் போலவே முடி முதல் நடை வரை அவரது பந்துவீச்சு குறி, ரன்-அப், லோட்-அப் மற்றும் கொண்டாட்டம் என அப்படியே இருக்கிறார். 

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய இம்ரான் “நான் சோயப் பாயைப் பார்த்து வளர்ந்தவன். எனது கிராமத்தில் உள்ள அனைவரும் அவரைப் போல் ஓடி, பந்து வீச முயன்றனர். ஆனால் என்னால் மட்டுமே அதைச் சரியாகச் செய்ய முடிந்தது. 

எனது கிராமம் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ளது. டேப் பந்தில் பந்து வீச ஆரம்பித்தேன். 2010ல், தேரா இஸ்மாயில் கானில் நடந்த ஒரு போட்டியின் போது, ​​நான் ஷோயப் அக்தரைப் போலவே பந்து வீசுகிறேன் என்று யாரோ என்னிடம் சொன்னார்கள்.

நான் ராணுவத்தில் சேர வேண்டும் என்று என் தந்தை விரும்பினார். இடைநிலைப் பள்ளிப் படிப்பை முடித்த ஓரிரு ஆண்டுகளில், தந்தையின் கோபத்தில் இருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ள, பாகிஸ்தான் ராணுவத்துக்கு உடல் தகுதித் தேர்வுக்கு சென்றேன் அதில் தேர்வு செய்யப்பட்டேன். எனக்கு வேலை கிடைத்ததற்காக என் வீட்டில் கொண்டாட்டம் நடந்த நாள் அன்று நான் வீட்டை விட்டு ஓடிவிட்டேன். 

நான் கிரிக்கெட் விளையாட விரும்பினேன். அதனால், நான் எனது கிராமத்தை விட்டு ஓடிவிட்டேன். நான் யாரிடமும் சொல்லவில்லை, நான் கராச்சிக்குப் புறப்பட்டபோது எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

குறைந்த பணத்துடன், ஆனால் ஒரு நல்ல டிரக் டிரைவரின் உதவியுடன், மூன்று நாட்களுக்குப் பிறகு நான் கராச்சியை அடைந்தேன். பின்னர் நேராக KDA கிரிக்கெட் மைதானத்திற்குச் சென்றேன். அவர் சொன்னதுபோல், FATA (கூட்டாட்சி நிர்வாகம் பழங்குடியினர் - Federally Administered Tribal) அணிக்காக விளையாடிய முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர் முகமது நயீம் சந்திக்க சென்றேன். 

மறுநாள் ட்ரைல்ஸ்-க்கு வரச் சொன்னார்கள். நான் வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டேன், கராச்சியில் தங்குவதற்கு எங்கும் இல்லை. நான் இப்போது ட்ரைல்ஸ் கொடுக்கலாமா’ என்றேன். அவர்கள் மறுத்துவிட்டனர், ஆனால் மைதானத்தில் தங்கி இரவைக் கழிக்க என்னை அனுமதித்தனர்.

கராச்சியில் எனது முதல் இரவை என்னால் மறக்கவே முடியாது. உறைபனியாக இருந்தது, என்னால் தூங்க முடியவில்லை, இரவு முடிந்துவிடும் என்று எதிர்பார்த்தேன். அநேகமாக என் வாழ்வின் மிக நீண்ட இரவு அது." என்று இம்ரான்  கூறினார்.

ஆங்கிலத்தில் படிக்க:- Meet Oman’s ‘Shoaib Akhtar’: Muhammad Imran, who left his home and country, works as an electrician to chase his dream

கவனம் ஈர்த்த இம்ரான் 

அடுத்த நாள், அவர் தனது செயலால் அனைவரையும் கவர்ந்தார், சில மாதங்களில், கராச்சி U-19 அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். "6 ஆட்டங்களில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தினேன். ரஷித் லத்தீப்பின் அகாடமிக்கு எதிராக நான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினேன். எஹ்சான் அலி, சாத் அலி, ஃபராஸ் அலி, இவர்கள் அனைவரும் இப்போது பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுகிறார்கள். எனது முதல் ஸ்பெல்லில் அவர்கள் மூவரையும் ஆட்டமிழக்க செய்தேன்.” என்று இம்ரான் நினைவு கூர்ந்தார்.

2013 ஆம் ஆண்டில், பாகிஸ்தானின் ஜி.எஸ்.எம் செல்லுலார் சேவை வழங்குநரான யுஃபோன், புகழ்பெற்ற வாசிம் அக்ரமின் மேற்பார்வையின் கீழ் வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சோதனையை நாடு முழுவதும் நடத்தியது. “நான் மணிக்கு 143 கிமீ வேகத்தில் ஓடி, பாகிஸ்தானில் இரண்டாவது இடத்தில் இருந்தேன். என் வாழ்க்கை மாறும் என்று நினைத்தேன். ஊடகங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாசிம் அக்ரம் என்னைப் பாராட்டி, என்னால் இன்னும் வேகமாக பந்து வீச முடியும் என்றார். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் உள்ள அரசியல் உங்களுக்குத் தெரியும், அமைப்பில் உள்ளவர்களை உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் அதற்கு மேல் செல்ல முடியாது, ”என்று இம்ரான் குற்றம் சாட்டினார்.

"நான் U-23, U-25 கிரிக்கெட்டில் விளையாடினேன், ஆனால் முதல் தர கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 2017 ஆம் ஆண்டில், இம்ரான் பி.எஸ்.எல் தொடருக்கான லாகூர் கிலாண்டர்ஸுக்காக ட்ரைல்ஸ்-க்குச் சென்றேன். அங்கு நான்  முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் ஜாவேத்தின் கண்ணில் பட்டேன். 

நான் வீசிய முதல் பந்திலேயே அவர் என்னை நோக்கி ஓடி, 'நீங்கள் விரைவாக இருக்கிறீர்கள்’ லாகூர் கலாந்தர்ஸின் உதவிப் பயிற்சியாளர் ஒருவர் எனது எண்ணை எடுத்து, நான் இருக்கும் இடத்தைப் பற்றி கேட்டார், ஆனால் எனக்கு அழைப்பு வரவில்லை. 

2019 ஆம் ஆண்டில், அவரது நண்பர் ஒருவர் தனது பந்துவீச்சு வீடியோவை யூடியூப்பில் வெளியிட்டார். மேலும் அவருக்கு ஓமானில் உள்ள டி20 உரிமையாளரிடமிருந்து அழைப்பு வந்தது.

‘நீங்கள் ஏன் ஓமன் வரக்கூடாது’ என்று கேட்டார்கள். அவர்கள் எனக்கு பாஸ்போர்ட் எடுக்க உதவினார்கள். ஆனால் ஓமனில் கிரிக்கெட் விளையாடுவதால் மட்டும் வாழ முடியாது. நான் பணம் சம்பாதிக்க வேண்டியிருந்தது. நான் சிசிடிவி கேமராக்களை சரிசெய்து வருகிறேன். நான் சுமார் 70,000 பாகிஸ்தான் ரூபாய் சம்பாதிக்கிறேன். குடும்பத்தின் மீதும் எனக்கு பொறுப்பு இருக்கிறது. நான் பாதிப் பணத்தை வீட்டுக்கு அனுப்புவது வழக்கம். இது 12 மணி நேர ஷிப்ட், பிறகு நான் ஜிம்மிற்கு செல்வேன்.

இப்போது நான் அசாய்பா அணிக்காக விளையாடுகிறேன். எனக்கு தங்க இடம் கொடுத்துள்ளது, நான் இப்போது ஆறு முதல் ஏழு மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறேன். நான் அதிகமாக கிரிக்கெட் விளையாடுகிறேன். திடீரென எனது வீடியோ வைரலாகி பிரபலமாகி விட்டேன்,” என்றார்.

ஆங்கிலத்தில் படிக்க:- Meet Oman’s ‘Shoaib Akhtar’: Muhammad Imran, who left his home and country, works as an electrician to chase his dream

இப்போது, ​​29 வயதில், இம்ரான் ஓமன் தேசிய அணி முகாமில் உள்ளார்.

“தலைமை பயிற்சியாளர் துலீப் மெண்டிஸ் மற்றும் அவரது உதவியாளர் மஜார் சலேம் கான் ஆகியோர் என்னை வழிநடத்துகிறார்கள். இன்னும் ஓரிரு வருடங்களில் உலகம் முழுவதும் உள்ள டி20 லீக் போட்டிகளில் என்னால் விளையாட முடியும் என்று சொல்கிறார்கள்." என்று முஹம்மது இம்ரான் கூறினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

 

Sports Cricket Shoaib Akhtar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment