முதல் போட்டியிலேயே சென்னை - மும்பை அணிகள் மோதல் - ஆரம்பத்திலேயே களைகட்டும் ஐபிஎல் 2020
IPL2020 : ஐபிஎல் 2020 தொடரின் முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் ஆன மும்பை இந்தியன் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
IPL2020 : ஐபிஎல் 2020 தொடரின் முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் ஆன மும்பை இந்தியன் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஐபிஎல் 2020 தொடரின் முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் ஆன மும்பை இந்தியன் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
13வது இந்தியன் பிரிமீயர் லீக் ( ஐபிஎல்) தொடர் 2020, மார்ச் 29ம் தேதி முதல் மே 17ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூரு உள்ளிட்ட 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாட உள்ளன. லீக் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் ஒருமுறை மோதும். ரவுண்ட் ராபின் முறையில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. நாக் அவுட் சுற்றுக்கான தேதி, இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மொத்தம் 60 போட்டிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடரில் பங்கேற்கும் எல்லா அணிகளுக்கும் ஒவ்வொரு ஹோம் டவுன் மைதானத்தில் விளையாட உள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மட்டும் கவுகாத்தி உள்ளிட்ட 2 மைதானங்களை ஹோம் டவுன்களாக தன்வசம் வைத்துள்ளது.
சென்னை, மும்பை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகள் மோதும் போட்டிகளின் அட்டவணை மட்டுமே தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்பஜ் இணையதளம் வழங்கியுள்ள தகவலின்படி, முந்தைய ஐபிஎல் தொடர்களில், வார இறுதி நாட்களில் தலா 2 போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த தொடரில், ஞாயிற்றுக்கிழமை மட்டும் 2 போட்டிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன்பின், தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடரை முடித்தபின், இந்த ஐபிஎல் தொடர் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.